சென்னை சாலிகிராமம், கன்னியாபுரம் 4வது தெருவைச் சேர்ந்த பாக்கியம் (பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாக்கியத்திற்கு திருமணமாகி 20 வயதான ஒரு மகள் உள்ளார். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதால், பாக்கியம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான தட்சிணாமூர்த்தி என்பவருடன் பாக்கியத்திற்கு பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. தட்சிணாமூர்த்தி அடிக்கடி பாக்கியம் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி, இளம் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியதும், பாக்கியம் மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
நீண்ட நேரம் தூங்கிய பின்னர் எழுந்த இளம் பெண்ணுக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன், யாரோ பாலியல் ரீதியாக தன்னை காயப்படுத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதை தாயிடம் கேட்டபோது, அவர் சரியான பதிலளிக்காமல் சமாளித்துள்ளார்.
மீண்டும் தட்சிணாமூர்த்தி வீட்டிற்கு வந்தபோது, பாக்கியம் மீண்டும் மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். தூக்க நிலையில் யாரோ தன்மீது படுத்திருப்பதை உணர்ந்த இளம் பெண் கண் திறந்தபோது, தட்சிணாமூர்த்தி இருப்பதைக் கண்டு தள்ளிவிட்டுள்ளார்.
இதை தாயிடம் கேட்டபோது, "இதை வெளியில் சொல்லக்கூடாது" என மிரட்டியுள்ளார். மேலும், இளம் பெண்ணை அறையில் பூட்டி வைத்து வெளியே செல்லவிடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அறையிலிருந்து தப்பித்த இளம் பெண், தோழியின் உதவியுடன் திருவண்ணாமலை உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி, வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து 7 வார கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண், உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை செய்த தட்சிணாமூர்த்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் பாக்கியத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்த தாயே மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Chennai's Saligramam, a 20-year-old woman stated that her mother administered sleeping medication to her on several occasions when a 50-year-old family acquaintance visited their home. She later learned of her pregnancy, leading to a police complaint. Both the mother and the man were arrested, and the matter is under investigation. The case has drawn local attention.

