68 வயதிலும் அடங்காத உடலுறவு வெறி.. விடிய விடிய லாட்ஜில்.. அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி..

சென்னை புழல் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கடந்த மூன்று மாதங்களாக அவர் தனது தாய் வீட்டில் தங்கி வருகிறார்.

இந்நிலையில், கணவர் தரப்பில் தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அவரது கணவர் மகேஷ் கண்ணா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பிரச்சனை நிலவும் வேளையில், கடந்த 10-ஆம் தேதி அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட ஞானபிரகாஷ் என்பவர், தன்னை அவரது கணவரின் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

"உங்கள் குடும்பப் பிரச்சனையை நான் தீர்த்துவைக்கிறேன். உங்கள் திருமண வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி நம்ப வைத்த அவர், பின்னர் "என்னுடன் லாட்ஜுக்கு வந்து இரவு முழுவதும் இரு... அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கலாம்" என்று ஆபாசமாகப் பேசி, சங்கீதா ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதைத் தனது உறவினர்களிடம் தெரிவித்த இளம்பெண், அவர்களுடன் சேர்ந்து சங்கீதா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த ஞானபிரகாஷ், "பெருச்சாளிக்கு பெரிய கருவாடு கிடைத்தது" போல குஷியில் "என்ன ஆர்டர் பண்ணலாம்?" என்று கேட்டு ரொமான்டிக் பார்வை வீசியதும், உறவினர்கள் உள்ளே புகுந்து அவரை சரமாரியாகத் தாக்கினர்.

ஹோட்டல் ஊழியர்கள் திகைத்து நிற்கும் நிலையில், அடி மழையால் நிலைகுலைந்த ஞானபிரகாஷை உறவினர்கள் பிடித்து, செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் என்பதும், 68 வயதான ஞானபிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

போலீசார் தரப்பில், இளம் பெண்ணின் குடும்பப் பிரச்சனையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தன்னை வழக்கறிஞர் என்று கூறி ஏமாற்றி, உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகக் கூறி, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மறுபுறம், ஞானபிரகாஷின் உறவினர்கள் தரப்பில், "அவர் கணவருக்கு ஆதரவாகப் பேசியதால் திட்டமிட்டு ஹோட்டலுக்கு வரவழைத்து தாக்கி, போலீசில் ஒப்படைத்துள்ளனர்" என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary : A 68-year-old retired court staff member posed as a lawyer and contacted a 23-year-old woman facing marital issues. He invited her to a hotel suggesting personal compromise. Her relatives confronted him at the location, assaulted him, and handed him over to police. He was arrested following investigation.