“நாம ரெண்டு பேரும் உல்லாசமா அதை பண்ணலாம்” கணவனின் காதலியுடன் சேர்ந்து மனைவி செய்த காது கூசும் அசிங்கம்!

இருண்ட இரவின் மறைவில், கோரக்பூரின் பாலத்தடியில் ஒரு உயிர் அழிந்தது. ஜனவரி 31, 2026 அன்று அதிகாலை, பிபி கஞ்ச் பகுதியில் உள்ள பாலத்துக்கு அடியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது.

நிர்வாணமாக, முகம் செங்கல்லால் நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடந்தது. அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்யப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவ இடத்தில் சிறிய துண்டு துணி ஒன்றையும், மது பாட்டில் ஒன்றையும் கைப்பற்றினர். அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஒரு ஒன்றாக ஆராய்ந்தனர்.

சிசிடிவியில் பதிவான ஒரு காட்சி விசாரணையை புதிய திசைக்கு கொண்டு சென்றது. ஜனவரி 30 இரவு, ஒரு ஆட்டோவில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் பயணிப்பது தெரிந்தது. 

ஆட்டோ ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, "ஆமாம் சார், ஒரு ஆணும் இரண்டு பெண்களையும் ஏற்றினேன். அதில் ஒரு பெண் மும்பை பாஷையில் பேசினாள்" என்று தகவல் கொடுத்தார்.

அதே இரவில் அப்பகுதியில் பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போலீசார், விஜய் சந்தியா தம்பதியை கண்டுபிடித்தனர். முதலில் விஜய், "எனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று மறுத்தான். 

ஆனால் அவனது மனைவி சந்தியா பதட்டமடைந்ததை கவனித்த போலீசார், இருவரையும் தனித்தனியாக விசாரித்தனர். அங்குதான் கொடூர உண்மை வெளியானது.

பிரியாவின் கதை

பிரியா ஷெட்டி – மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றிய 35 வயது பெண். அங்கேயே விஜய் குமார் சாஹ்னி என்ற இளைஞனை சந்தித்தாள். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 2012-ல் லிவ்-இன் உறவில் வாழத் தொடங்கினர். பின்னர் பிரியா கர்ப்பமானதும் திருமணம் செய்துகொண்டனர். ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் 2014-ல் விஜய் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசம் கோரக்பூருக்கு திரும்பினான். அங்கு சந்தியாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தத் தொடங்கினான். இருவருக்கும் இப்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே இன்ஸ்டாகிராம் வழியாக பிரியாவும் விஜயும் மீண்டும் தொடர்பு கொண்டனர். பிரியா தனது குழந்தையுடன் தவிப்பதை அறிந்த விஜய், அடிக்கடி பணம் அனுப்பினான். இது சந்தியாவுக்கு தெரிய வந்தது. கோபமும் பொறாமையும் கொந்தளித்த சந்தியா, கணவனை கண்டிக்காமல், "இந்த பிரச்சினையை வேறு வழியில் முடிக்கலாம்" என்று திட்டமிட்டாள். விஜய்யும் அதற்கு ஒத்துக்கொண்டான்.

கொலை திட்டம்

பிரியாவை அழைத்து வருவதற்காக, "அயோத்திக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வோம்" என்று சொல்லி கோரக்பூருக்கு வருமாறு அழைத்தனர். நம்பிக்கையுடன் ஜனவரி 26 அன்று பிரியா கோரக்பூருக்கு வந்தாள்.

மூவரும் சேர்ந்து சில நாட்கள் ஊரை சுற்றினர், மது அருந்தினர். ஜனவரி 30 இரவு, திட்டமிட்டபடி பிரியாவுக்கு அதிக அளவு மது கொடுத்து மயக்கினர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அடையாளம் தெரியாமல் இருக்க, ஆடைகளை கழற்றி வீசினர். செங்கல்லால் முகத்தை மீண்டும் மீண்டும் அடித்து சிதைத்தனர்.

சடலத்தை எங்கு வைப்பது என்று யோசித்த விஜய், தனது மாமனார் ராம்விலாஸ் சாஹ்னிக்கு போன் செய்தான். அவரும் வந்து, "பாலத்தடியில் வீசலாம்" என்று ஆலோசனை சொன்னார். மூவரும் சேர்ந்து சடலத்தை பாலத்தடியில் வீசிவிட்டு தப்பினர்.

பாவத்தை கழிக்கும் நாடகம்

கொலை செய்த பாவத்தை போக்குவதற்காக, விஜயும் சந்தியாவும் நேராக அயோத்திக்கு சென்றனர். மொட்டை அடித்து, சுவாமி தரிசனம் செய்து, எதுவும் நடக்காதது போல வீடு திரும்பினர். விஜய் தனது தலை, தாடி, மீசையை மொட்டை அடித்து முகம் மாற்றம் செய்துகொண்டான் – சிசிடிவியில் அடையாளம் தெரியாமல் இருக்க.

ஆனால் சிசிடிவி காட்சிகள், ஆட்டோ ஓட்டுநரின் தகவல், செல்போன் சிக்னல், தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை போலீசாருக்கு உதவின. விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

விஜய் குமார் சாஹ்னி, சந்தியா, ராம்விலாஸ் சாஹ்னி மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு காதல் தொடங்கிய இடத்தில், பொறாமை, பயம், திட்டமிடல் என்று மாறி, இறுதியில் கொடூரமான மரணத்தில் முடிந்தது. பிரியாவின் குழந்தை இப்போது தாயை இழந்து தவிக்கிறது. கோரக்பூரின் அந்த பாலத்தடி இனி ஒரு கொடூர நினைவாகவே இருக்கும்.

Summary in English : In Gorakhpur, a woman’s body was found under a bridge. Police investigation using CCTV and mobile data led to the arrest of a man, his wife, and her father. The case involved a past relationship, financial support, and a planned visit to Ayodhya.