தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவ வழக்கில், முற்றிலும் அறிவியல் அடிப்படையிலான விசாரணை மூலமும், உயர் அதிகாரிகளின் தொடர் வழிகாட்டுதலாலும் குற்றவாளியை கைது செய்ய முடிந்ததாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மதன் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து அவர் அளித்த விரிவான பேட்டியில், “இந்த கேஸுக்கு முழுக்க முழுக்க டெடிகேட்டாக இருந்தோம்.

இது இல்லாமல் பார்த்தால், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு துறை அதிகாரிகளான ஏடிஜிபி சார் (சவுத் ஜோன்) மற்றும் ஐஜி சார் ஆகியோர் ஒரு தரம் தூத்துக்குடியிலேயே கேம்ப் செய்து, தொடர் கைடன்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்கள் கொடுத்தனர்.
இரண்டாவதாக, சம்பவம் நடந்த நாளிலிருந்து இன்று வரை திருநெல்வேலி சரக டிஐஜி திரு. சரவணன் ஐபிஎஸ் சார் தினசரி சம்பவ இடத்திற்கு வந்து, கிராமம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனை சந்தித்து, எனக்கு முழு சப்போர்ட்டிவான வழிகாட்டுதல் கொடுத்தார்” என்றார்.
முற்றிலும் அறிவியல் அடிப்படையில் விசாரணை
எஸ்.பி. மதன் மேலும் கூறியதாவது: “இந்த வழக்கின் விசாரணை முழுவதும் பியூர்லி சயின்டிபிக் லைன்ஸில் தான் நடைபெற்றது.
சம்பவம் நடந்த அதே நாள் பிங்கர் பிரிண்ட் எக்ஸ்பர்ட், டாக் ஸ்க்வாட், ஃபாரன்சிக் சயின்டிபிக் டீம் உள்ளிட்ட அனைத்து துறை வல்லுநர்களும் வந்து, சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தடயங்களையும் சேகரித்து, தனித்தனியே ஸ்பெஷல் ரிப்போர்ட் தந்தனர்.
சம்பவ இடத்தில் நேரடி சிசிடிவி கேமரா இல்லாத போதிலும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 98 சிசிடிவி கேமராக்களை முழுமையாக அனலைஸ் செய்தோம். அதற்கென தனிப்படை அமைத்து, ஒவ்வொரு கேமராவின் பதிவுகளையும் நுணுக்கமாக பரிசோதித்தோம்.
அதேபோல், டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் 2,574 நபர்களின் கால் பதிவுகளை பெற்று, தனி டீம்கள் மூலம் அனலைஸ் செய்தோம்.
மேலும், எம்ஓ (மோடஸ் ஆபரண்டி) கிரிமினல்கள், ஜெயில் ரிலீஸ் ஆன அபாண்டர்கள், முன்பு தண்டனை பெற்ற குற்றவாளிகள், செக்சுவல் அபாண்டர்கள் உள்ளிட்ட 461 பேரை டிஜிட்டல் எவிடன்ஸ் மற்றும் நேரடி விசாரணை மூலம் ரூல் அவுட் செய்தோம்.”
800 ஆண்களின் அலிபை சரிபார்ப்பு - கிராமம் முழுக்க தீவிர விசாரணை
வேடநத்தம் கிராமத்தில் மட்டும் தோராயமாக 800 ஆண்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட எஸ்.பி. மதன், “அந்த 800 பேரையும் ஏன் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கக் கூடாது என்பதை சந்தேக அடிப்படையில் விசாரித்தோம். ஒவ்வொருவரின் கேரக்டர், கிராம மக்கள் கொடுத்த சாட்சியங்கள், அலிபி (அன்று எங்கே இருந்தார்) ஆகியவற்றை தனி டீம்கள் மூலம் பரிசோதித்து, அவர்கள் சொன்ன விவரங்களை முழுமையாக சரிபார்த்தோம்.
வேடநத்தம், வேப்பலோடை, புதூர், துரைசாமிபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இதே முறையில் விசாரணை நடைபெற்றது” என்றார்.
இரவு பகல் பாராத போலீஸார் - வண்டியிலேயே தூக்கம்
இந்த வழக்கில் கான்ஸ்டபிள் ரேங்க் முதல் எஸ்ஐ வரை உள்ள அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் பணியாற்றியதாகப் புகழ்ந்த எஸ்.பி. மதன், “அவர்கள் கிடைத்த இடத்திலேயே கேம்ப் செய்து, வண்டியிலேயே தூங்கி, ஓய்வு இல்லாமல் உழைத்தனர்.
இந்த சின்சியர் மற்றும் டெடிகேட்டட் பணியால்தான் வழக்கை கிராக் செய்ய முடிந்தது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் இந்த ப்ரொபஷனல் அணுகுமுறைதான் வெற்றிக்கு அடிப்படை” என்று தெரிவித்தார்.
போக்சோ சட்ட விதி 23 - புகைப்படம், பெயர் வெளியிட்டால் கடும் நடவடிக்கை
இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்கள், பிரிண்ட் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் தேவையின்றி வெளியிடுவதை கண்டித்த எஸ்.பி. மதன், “இது சட்டப்படி குற்றம். இதுவரை 6 வழக்குகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
போக்சோ சட்டம் பிரிவு 23-ன் கீழ் இனிமேலும் யார் இதைச் செய்தாலும், அவர்கள் மீதும், அவர்களை தூண்டியவர்கள் மீதும் உடனடியாக FIR பதிவு செய்யப்படும்” என்று எச்சரித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எஸ்.பி. மதன் உறுதியளித்தார்.
தமிழ்நாடு காவல்துறையின் முன்மாதிரி விசாரணை
இந்த வழக்கு, தமிழ்நாடு காவல்துறையின் தொழில்முறைத்துவம், அறிவியல் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் உயர் அதிகாரிகளின் துரித தலையீடு ஆகியவற்றுக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போலீஸ் பணி தொடரும் என்று அதிகாரிகள் உறுதியுடன் தெரிவித்தனர்.
Summary : In the Vilathikulam schoolgirl case, the accused was arrested through purely scientific investigation. Fingerprint experts, forensic teams, 98 CCTV analyses, 2574 tower dump records, and verification of alibis from hundreds of local men led to the identification. Senior officers provided continuous guidance and support.

