Posts

Showing posts with the label Thuthukudi district

+2 மாணவியை கொன்ற கொடூரன் சிக்கியது எப்படி..? காவல்துறை விளக்கம்

Image
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவ வழக்கில், முற்றிலும் அறிவியல் அடிப்படையிலான விசாரணை மூலமும், உயர் அதிகாரிகளின் தொடர் வழிகாட்டுதலாலும் குற்றவாளியை கைது செய்ய முடிந்ததாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மதன் தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து அவர் அளித்த விரிவான பேட்டியில், “இந்த கேஸுக்கு முழுக்க முழுக்க டெடிகேட்டாக இருந்தோம்.  இது இல்லாமல் பார்த்தால், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு துறை அதிகாரிகளான ஏடிஜிபி சார் (சவுத் ஜோன்) மற்றும் ஐஜி சார் ஆகியோர் ஒரு தரம் தூத்துக்குடியிலேயே கேம்ப் செய்து, தொடர் கைடன்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்கள் கொடுத்தனர்.  இரண்டாவதாக, சம்பவம் நடந்த நாளிலிருந்து இன்று வரை திருநெல்வேலி சரக டிஐஜி திரு. சரவணன் ஐபிஎஸ் சார் தினசரி சம்பவ இடத்திற்கு வந்து, கிராமம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனை சந்தித்து, எனக்கு முழு சப்போர்ட்டிவான வழிகாட்டுதல் கொடுத்தார்” என்றார். முற்றிலும் அறிவியல் அடிப்படையில் விசாரணை எஸ்.பி. மதன் மேலும் கூறியதாவது: “இந்த வழக்கின் விசாரணை முழுவதும் பியூர்லி சயின்டிபிக் லைன்ஸில் த...