தமிழக அரசியல் களத்தில் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) மீது பெரும் எதிர்பார்ப்பும், யூகங்களும் நிலவி வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய்யின் கட்சி தனித்துப் போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து களமிறங்குமா? என்பது பரபரப்பான கேள்வியாக மாறியுள்ளது.
தவெகவின் உள்ளக ஆலோசனைகள், நிர்வாகிகள் சந்திப்புகள் மூலம் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விஜய்யை தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களால் தாக்கி வந்ததால், அவர் மீது கோபமும் வெறியும் ஏற்பட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தரப்பில் பல சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகவும், பொய் குற்றச்சாட்டுகளால் முடக்க முயற்சி நடந்ததாகவும் விஜய் வெளிப்படையாகக் கூறி வருகிறார்.
தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதும், அது திமுக-அதிமுக இரு கட்சிகளுக்கும் வாக்கு பிரிவை ஏற்படுத்தி அவற்றின் வெற்றியை உறுதி செய்யும் என்பதும் கருத்துக் கணிப்புகளால் தெரிய வந்துள்ளது. இதனால் கூட்டணி அமைப்பதே சிறந்தது என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஆட்சி பங்கு கொடுப்பதாகக் கூறியும் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை. சில சிறு கட்சிகள் கூட கடைசி நேரத்தில் ஆதரவை திரும்பப் பெற்றதால், விஜய் மிகுந்த அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணி (அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி) உடன் இணைவது குறித்து வலுவான விவாதங்கள் நடைபெறுகின்றன.
சில தகவல்களின்படி, தவெகவுக்கு 40 முதல் 50 தொகுதிகள் வரை ஒதுக்கீடு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சுமார் 150 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.
இந்தக் கூட்டணி அமைந்தால், 200 முதல் 220 தொகுதிகள் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், விஜய் 40-45 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து, தனது கட்சிக்கு பெரும் அங்கீகாரம் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையே, திமுக தரப்பு இந்தக் கூட்டணியை தீவிரமாக எதிர்க்கிறது. விஜய் NDA-யில் சேராமல் இருக்க ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றை விஜய்யுடன் கூட்டணி வைக்க நிர்பந்திப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. ஒருவேளை இது நடந்தால், அது மக்கள் நல கூட்டணி 2.0 போல மாறி, அதிமுக ஆட்சி அமைக்க உதவலாம் எனவும் அஞ்சுகின்றனர்.
தவெக தொண்டர்களோ, "எதிர்க்கட்சித் தலைவர்" பதவி துணை முதல்வர் பதவியை விட பெரியது, மக்களின் குறைகளை அரசுக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய பொறுப்பு எனக் கூறி, NDA கூட்டணியை இயற்கையானதாகவும், வரவேற்கத்தக்கதாகவும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், சமீபத்திய தகவல்களின்படி தவெக தரப்பு NDA உடனான கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை; பாஜக தரப்பு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது, ஆனால் விஜய் தரப்பு தனித்து போட்டியிடும் முடிவிலேயே உறுதியாக இருப்பதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியலை கலந்தது மிகப்பெரிய தவறு. இதை அவர்கள் செஞ்சிருக்கக்கூடாது. இது அவரை மட்டுமில்லாமல், கட்சி தொண்டர்களையும், தனது ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிட்டது. இதை அவர்கள் செய்திருக்க கூடாது என்ற வெறியின் உச்சத்தில் இருக்கிறார் விஜய் என்றும் கூறுகிறார்கள்.
இதனால், தான் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். எதிர்கட்சி தலைவராக கூட சட்டமன்றத்திற்குள் நுழையலாம் என்ற முடிவுக்கே விஜய் வந்தார் என்றும் கூறுகிறார்கள். இந்த யூகங்கள் அனைத்தும் பெரும் ஊகங்கள் மட்டுமே!
அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு வெளியாகலாம். விஜய்யின் அரசியல் பயணம் வரலாற்று சாதனையாக மாறுமா? அல்லது தனித்த போராட்டமாக தொடருமா? தமிழக அரசியல் இப்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது!
Summary : Actor Vijay's TVK is leaning toward an alliance with the NDA for the 2026 Tamil Nadu assembly election after facing challenges in forming other coalitions. Reports suggest 40–50 seats may be allocated to TVK, potentially positioning Vijay as Opposition Leader with significant Assembly presence if the alliance succeeds. Final decision is awaited.

