தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த இழுபறி தொடர்ந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதால், கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

திமுக தரப்பில் காங்கிரஸுக்கு 24-27 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று பிடிவாதமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் காந்தி அணி நேரடியாக 35 தொகுதிகளுக்கு மேல் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், சில தகவல்களின்படி 41 வரை கோரிக்கை வைத்ததாகவும் தெரிகிறது.
இதனால், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறாமல் தடுமாற்றமடைந்துள்ளன.இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் எம்பி, "திமுக செய்த பல பாவங்களுக்கான பழியை காங்கிரஸ் சுமக்கிறது" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், "திமுக செய்த பாவங்கள் என்ன?" என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு கோரியும், அதிக தொகுதிகள் வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
"திமுக வெற்றி பெற வேண்டுமானால் காங்கிரஸ் தேவை" என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லாமல், போதுமான தொகுதிகள் இல்லாமல் கூட்டணியில் இருப்பது சாத்தியமில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாகக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன.
திமுக தரப்பில் இருந்து, "கூட்டணி பிரிந்தால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு கிடைக்கும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில காங்கிரஸ் புள்ளிகள் "இந்த Myth-ஐ வச்சி மிரட்ட சாமான்ய மக்கள் என நினைச்சீங்களா..?" என்று நேரடியாகவே கேட்டு 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்கிறார்களாம்.
இந்நிலையில், இன்று (மார்ச் 4, 2026) திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்களின்படி, 95% வாய்ப்புடன் கூட்டணி தொடரும் என்றாலும், தொகுதி பங்கீடு இழுபறி காரணமாக பதற்றம் நீடிக்கிறது.
மறுபக்கம், கூட்டணி பிரிந்தால் தமிழக வெற்றி கழகம் (தவெக) உடன் காங்கிரஸ் இணைந்தால், நடிகர் விஜய் மீதான மக்கள் அலை இரு கட்சிகளுக்கும் பெரும் வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெகவுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதியாக என்ன முடிவு எடுக்கப்படும்? கூட்டணி தொடருமா அல்லது பிரிவா? இன்றைய நிகழ்வுகளைப் பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழக அரசியல் களத்தில் இது மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்.
2011-ல் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்தது அதிமுக. ஆனால், 2016-ல் எங்கள் ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, அனைத்து தொகுதியிலும் தனித்து நின்று போட்டியிடும் துணிச்சலான முடிவை எடுத்தது. ஆனால், திமுக அப்படி ஒரு முடிவை எடுக்காமல் இருக்க என்ன காரணம்..? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என உங்கள் கருத்தை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.
Summary : Tensions persist in the DMK-Congress alliance over seat sharing for the 2026 Tamil Nadu assembly election. Congress demands more than 35 seats while DMK offers around 24-27. Discussions continue with high stakes for both parties. A final decision on the alliance is expected today.

