தொக்காக சிக்கிய TVK விஜய்! CBI மீட்டெடுத்த Deleted Drone காட்சிகள்! வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்! பகீர் வீடியோ!
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (டிவிகே) கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் அக்கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள் தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கூட்டம் மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் நடைபெறும் என அப்பகுதியில் தகவல் பரப்பப்பட்டதாகவும், ஆனால் போதிய கூட்டம் வராததால் நடிகர் விஜய்யை வேண்டுமென்றே தாமதமாக வரச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாகவும், குறிப்பாக சனிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிய பலர் அந்த வழியில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சாலை வழியாக சென்றவர்கள் எனவும், இரு பக்கங்களும் செல்ல முடியாமல் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. பாதி பேர் மட்டுமே விஜய்யை பார்க்க வந்தவர்கள் எனவும், டிவிகே தரப்பு திட்டமிட்டு தாமதம் செய்தது இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனவும் விஜய் மீது முதல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு காவல் துறை மற்றும் தமிழக அரசு தான் எனக் கூறி வருகிறார். கரூரைச் சேர்ந்த முக...