கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் முடிந்து ஒரு வருடத்துக்குள் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவர் சுஜாதா தேவி. எதிர்பாராத விதமாக விபத்தில் அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்யாமல், தனது மகள் அனிதாவைத் தனியாக வளர்த்து வந்தார்.
அனிதா 19 வயதை எட்டிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் விஜய் குமாருக்கு அனிதாவின் திருமணத்தை சுஜாதா தேவி நடத்தி வைத்தார். அனிதாவும் விஜயும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததை அறிந்தே இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்ததாக சுஜாதா கூறினார்.

ஆனால் உண்மை அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
திருமணத்துக்கு முன்பே சுஜாதா தேவி கர்ப்பமாக இருந்தார். அதற்குக் காரணம் வேறு யாருமல்ல... தன் மகள் அனிதாவுக்கு திருமணம் செய்து வைத்த அதே விஜய் குமார்தான்!
காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்:
சுஜாதா தேவி தனியார் வங்கியில் பணியாற்றி வரும் நிலையில், அடிக்கடி பரிவர்த்தனைக்காக வரும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் விஜய் குமாருடன் நட்பு ஏற்பட்டது. நட்பு படிப்படியாக உறவாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கத் தொடங்கினர்.
இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிமையில் இருந்த 39 வயது சுஜாதாவுக்கு, 25 வயது விஜயின் அரவணைப்பு புதிய உலகத்தைக் காட்டியது. ஆனால் வயது வித்தியாசம் காரணமாக திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதால், “தன் மகளை விஜய்க்கு திருமணம் செய்து வைத்தால், எங்களது கள்ளத் தொடர்புக்கு எந்த இடையூறும் இருக்காது” என முடிவு செய்தார் சுஜாதா.
அதன்படி, அனிதாவுக்கு விஜயுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் சுஜாதா தேவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மருத்துவப் பரிசோதனையில் அந்தக் கர்ப்பத்துக்கு விஜய் குமாரே காரணம் என்பது உறுதியானது.
குடும்பம் சிதைந்தது... மகள் விவாகரத்து கோருகிறார்
காவல்துறை விசாரணைக்குப் பிறகு குடும்பத்தில் பெரும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. சுஜாதா தேவியோ, “நான் என் கர்ப்பத்தை கலைக்க மாட்டேன். என் குழந்தையை பெற்று வளர்க்க விரும்புகிறேன்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
மறுபுறம், 19 வயது அனிதா தன் கணவர் விஜய் குமாரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் தாயே தன் கணவருடன் உறவு வைத்து கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் அனிதா மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்.
இந்த சம்பவம் அரங்கேரி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தாயே சக்காளத்தியாக மாறியிருக்கிறார்” என்று பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பேசுகின்றனர்.
காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : In Bihar's Hasanpur area of Arangari, a 39-year-old widow became pregnant. The father is her 25-year-old son-in-law who is married to her 19-year-old daughter. The widow had arranged the marriage after developing a close relationship with the man. She has decided to continue the pregnancy while her daughter has filed for divorce.

