ஜெ. ஸ்டைலை கையில் எடுத்த விஜய்! மெகா பிளானோடு இறங்கும் தவெக!

சென்னை, ஏப்ரல் 3: தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைவரும் நடிகருமான விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு முன்னாள் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் நாமினேஷன் தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், இப்போது இரு தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு முன்னாள் தாக்கல் செய்த பிறகு, விஜய் பேரணியாக மக்களைச் சந்தித்தார். தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு நடுவே ஒவ்வொரு இடத்திலும் கை அசைத்தபடி முன்னேறினார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுமேடையில் உரையாற்றினார்.

உரையில் முக்கியமாகப் பேசிய விஜய், “கரூர் சம்பவத்திலிருந்து எனது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வரை ஒரு கூட்டு சூழ்ச்சி நடந்துள்ளது.

படம் வெளியானால் அது தேர்தலில் பெரும் ஆயுதமாக மாறும் என்பதாலேயே வெளியிடாமல் தடுக்கப்படுகிறது. எனக்கு நீதி வேண்டும்” என்று வலியுறுத்தினார். இது ஒரு பெரிய சதி என்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

பிரச்சாரத்தின்போது விஜய், நேற்று வெளியான புதிய பாடலின் வரிகளைப் பாடி மக்களை உற்சாகப்படுத்தினார். “நான் தன்னந்தனியாளே… நீ எழுந்து நில்லு… எட்டு கோடி பேரே மிரளும்போது… விசில் சத்தம் தூரத்தில்… நல்ல வங்க வாழ நீ விசில் ஊது… கடைசி நம்பிக்கை” போன்ற வரிகளை மக்களுடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதாக தொண்டர்கள் பாராட்டினர்.

இரட்டைத் தொகுதி நாமினேஷன் குறித்து சிலர் விமர்சனம் செய்தாலும், இது புதிதல்ல என்பதை விஜய் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா, நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தேசியத் தலைவர்களும் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளதை நினைவூட்டுகின்றனர்.

வரும் நாட்களில் தீவிர பிரச்சாரம்

விஜயின் பிரச்சாரம் இனி மேலும் தீவிரமடைய உள்ளது.

  • ஏப்ரல் 4 அன்று புதுச்சேரியில் பிரச்சாரம்.
  • ஏப்ரல் 7 அன்று நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணம்.

தென் மாவட்டங்களில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கும் ஜெயலலிதாவின் பாணியை விஜய் கையாள்வார் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் உத்தியை அவர் பின்பற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் இந்த இரட்டைத் தொகுதி உத்தி, தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது பிரச்சாரம் இனி தொடர்ச்சியாக தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Actor Vijay filed his nomination for Trichy East constituency today, after already filing for Perambur. He is contesting from two seats. Following the filing, he addressed a public meeting and interacted with supporters. He highlighted challenges faced by his film Jananayagan and called for justice. He also sang lines from a new campaign song to engage the crowd. His election campaign will continue with visits to Puducherry on April 4 and southern districts including Nellai on April 7.