ஜெ. ஸ்டைலை கையில் எடுத்த விஜய்! மெகா பிளானோடு இறங்கும் தவெக!
சென்னை, ஏப்ரல் 3: தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைவரும் நடிகருமான விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு முன்னாள் தாக்கல் செய்தார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் நாமினேஷன் தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், இப்போது இரு தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு முன்னாள் தாக்கல் செய்த பிறகு, விஜய் பேரணியாக மக்களைச் சந்தித்தார். தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு நடுவே ஒவ்வொரு இடத்திலும் கை அசைத்தபடி முன்னேறினார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுமேடையில் உரையாற்றினார். உரையில் முக்கியமாகப் பேசிய விஜய், “கரூர் சம்பவத்திலிருந்து எனது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வரை ஒரு கூட்டு சூழ்ச்சி நடந்துள்ளது. படம் வெளியானால் அது தேர்தலில் பெரும் ஆயுதமாக மாறும் என்பதாலேயே வெளியிடாமல் தடுக்கப்படுகிறது. எனக்கு நீதி வேண்டும்” என்று வலியுறுத்தினார். இது ஒரு பெரிய சதி என்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். பிரச்சாரத்தின்போது விஜய், நேற்று வெளியான புதிய பாடலின் வரிகளைப் பாடி மக்களை உற்சாகப்படுத்தினார். “நான் தன்...