மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் கோண்டிகேடா சாரண் கிராமத்தில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
28 வயதான புரோஹித் தேவகிருஷ்ணா என்ற மிளகாய் வியாபாரியை அவரது மனைவி பிரியங்கா புரோஹித் (25) தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
கொலைக்குப் பிறகு சடலத்தின் முன்பாகவே இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும், அதை மறைக்க முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 7-ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவத்தில், பிரியங்கா போலீஸாரிடம் அளித்த முதல் தகவலில், “வீட்டிற்குள் நான்கு மர்ம நபர்கள் புகுந்து என்னை கட்டிப் போட்டு, வாயில் துணியை அடைத்து விட்டு என் கணவரை கொலை செய்து, நகைகள் உள்ளிட்ட ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர்” என்று அழுதபடி கூறினார். ஆனால், விசாரணை முன்னேறியபோது இது முழுக்க முழுக்க திட்டமிட்ட கொலை என்பது வெளியானது.

போலீஸ் விசாரணையில் பிரியங்கா தனது கணவரை அவரது கருப்பு நிறத்தைச் சுட்டிக்காட்டி அடிக்கடி திட்டியதாகவும், “நீ கருப்பாக இருக்கிறாய், எனக்கு தகுதியானவன் அல்ல” என்று கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த உறவில் திருப்தி இல்லாததால், ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த தனது கள்ளக்காதலன் கமலேஷ் புரோஹித் (32) உடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். இருவரும் சேர்ந்து சுரேந்திர பட்டி என்ற கூலிப்படையாளியை ரூ.1 லட்சத்திற்கு ஏற்பாடு செய்து, ரூ.50,000 முன்பணம் கொடுத்து கொலையை நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலை நடந்த பிறகு, பிரியங்கா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து, இறந்து கிடந்த கணவரின் சடலத்தின் முன்பாகவே உல்லாசமாக உடலுறவில் ஈடுபட்டதாக விசாரணையில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட கிழிந்த ஆணுறை மற்றும் காய்ந்த விந்து திரவம் படிந்த பிரியங்காவின் உடை ஆகியவை இதை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஊர் மக்கள், “ரத்தம் உறைந்து, சுவற்றில் உள்ள ரத்தக்கறை காய்ந்து, உடல் குளிர்ச்சியாக இருந்தது.
கொலை நடந்து குறைந்தபட்சம் 6 மணி நேரம் கழித்துதான் பிரியங்கா அழுது அலறினார்” என்று கூறியதும், போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும், “திருட்டுப் போன” நகைகள் வீட்டின் ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இது கொலை நகைக்காக அல்ல, முழுக்க திட்டமிட்ட கொலை என்பதை உறுதிப்படுத்தியது. அழைப்பு பதிவுகள், கள்ளக்காதலனுடனான உறவு மற்றும் முன்னுக்கு பின் முரணான வாக்குமூலங்கள் ஆகியவை விசாரணையை வேகப்படுத்தின.

இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா மற்றும் கமலேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கூலிப்படையாளி சுரேந்திர பட்டியும் தேடப்படுகிறார். இந்த கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary in English : In Madhya Pradesh a woman named Priyanka Purohit faced questions after her husband Devkrishna was found dead at home. She first told police unknown persons entered the house tied her up and took away valuables. Later investigation showed she had contact with another man and the reported stolen items were found hidden inside the house. Police are continuing their inquiry into the events.

