Posts

Showing posts with the label readiness

உடலுறவின் போது பெண்கள் எளிதில் உச்சகட்டம் அடைய ஆண்களுக்கு இந்த ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கணும்..

Image
உடலுறவின் போது ஆண்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பாலியல் மருத்துவர் டாக்டர் பிரியா ரங்கநாதன் அறிவுறுத்துகிறார். அதில் பெண்கள் எளிதில் உச்சம் அடைய ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை பற்றி கூறியுள்ளார். அதை இந்த பதிவில் பார்க்கலாம், அவர் கூறியதாவது, உடலுறவின் போது “உங்கள் துணையை முழுமையாக தயார்படுத்தாமல், நேரடியாக உறவில் ஈடுபட முயற்சி செய்வது மிகவும் தவறு. துணை அதற்கு உடல்ரீதியாக தயாராக இல்லாதபோது, அவரது உறுப்பில் இயற்கையான ஈரப்பதம் (லூப்ரிகேஷன்) இருக்காது. அந்த நிலையில் வலுக்கட்டாயமாக முயற்சி செய்தால், அவருக்கு கடுமையான வலி ஏற்படலாம். சில சமயங்களில் மென்மையான திசுக்களில் சிறிய காயங்களும் உண்டாக வாய்ப்பு உள்ளது.எனவே, உறவுக்கு முன்பு போதுமான முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியம். உங்கள் துணையின் உடல் முழுவதும் தூண்டப்பட்டு, அவர் முழுமையாக தயாராகி, அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள் என்ற சிக்னல் கொடுக்கும் வரை அவசரப்படாமல் துணையை தயார் படுத்த வேண்டும். அவர் தானாக முன்வந்து அடுத்த கட்டத்திற்கு தயாராக இருப்பதாக உணர்த்தும் வரை அமைதியாக இருப்பது முக்கிய...