சென்னையில் காதலனை கடத்திய காதலி.. ரத்தம் வந்தும் விடல.. காருக்குள் நடந்த அசிங்கத்தின் உச்சம்!

சென்னை கோயம்பேட்டில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கிய வழக்கில், அவரது முன்னாள் காதலி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மதுரவாயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வரும் சசிகுமார் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருக்கு, இடாகராம் மூலம் ரித்திகா (பெயர் மாற்றப்பட்டது) என்ற இளம்பெண் அறிமுகமானார். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவரும், பின்னர் காதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரித்திகாவுக்கு வேறொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதை அறிந்த சசிகுமார் ஆத்திரமடைந்தார். தான் ரித்திகாவுக்கு கொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ரித்திகா, தனது நண்பர்களுடன் சேர்ந்து சசிகுமாரை கோயம்பேட்டில் வைத்து காரில் கடத்திச் சென்று, சரமாரியாகத் தாக்கியுள்ளார். இரத்தம் வந்தும் விடாமல் தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் செய்துள்ளனர். இதனால், மாணவர் சசிகுமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரித்திகா உட்பட நான்கு பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் மதுரவாயில் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary in English : In Chennai, a college student named Sasikumar was taken in a car from Koyambedu and assaulted by his former girlfriend Rithika and three others after a dispute over money he had given her. Police arrested the four individuals involved.