ஈரான்-அமெரிக்கா இடையிலான இரண்டு வார தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு: இந்திய பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி, ஆனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானை ஒரே இரவில் அழிக்கப் போவதாக எச்சரித்த நிலையில், திடீரென தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோரின் தலையீட்டால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக, உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்கும் நிபந்தனையின் அடிப்படையில், இரண்டு வாரங்களுக்கு போர் நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்தார். ஈரானும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த போர் நிறுத்தம் குறுகிய காலத்தில் பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக:பங்குச் சந்தை: இன்று (ஏப்ரல் 8, 2026) சென்செக்ஸ் 2,600 பாயிண்டுகளுக்கு மேல் உயர்ந்து 13 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. நிஃப்டி 23,850க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FPI) பணத்தை வெளியே எடுப்பது குறையும், volatility குறையும், பெரும்பாலான துறைகளில் ஏற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. டிஃபென்ஸ் பங்குகள் சற்று திருத்தம் காணலாம்.
எரிபொருள் விலை: பிரெண்ட் க்ரூட் விலை $100க்கு கீழ் விழுந்துள்ளது (சுமார் 13-17% வீழ்ச்சி). இது இந்தியாவின் இறக்குமதி பில் கணிசமாகக் குறைய உதவும். டீசல், பெட்ரோல் விலை குறைவு, போக்குவரத்து மற்றும் ஏவியேஷன் துறைக்கு நல்லது. மே-ஜூன் ஹாலிடே சீசனில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும், டிஸ்கிரிஷனரி செலவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு: டாலருக்கு எதிராக ரூபாய் ஸ்திரப்படுத்தப்படும். சமீபத்தில் பலவீனமடைந்த ரூபாய் சற்று வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய தாக்கம்: ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து மீண்டும் சீராகும். உலக அளவில் 55,000 மெர்ச்சன்ட் கப்பல்களில் நாளொன்றுக்கு 140 கப்பல்கள் செல்லும் இந்த வழியின் தடை நீங்கும்.
எண்ணெய், எல்பிஜி உள்ளிட்ட பொருட்களின் விநியோகச் சங்கிலி மேம்படும்.ஆனால், பொருளாதார வல்லுனர் கணபதி சுட்டிக்காட்டியது போல், இது தற்காலிகம் மட்டுமே. இரண்டு வாரங்களுக்குப் பின் என்ன நடக்கும் என்பது உறுதியற்றது. எனவே, முதலீட்டாளர்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
கவலைக்குரிய அம்சம்: ஈரான் போர் நிறுத்தத்தின் ஒரு நிபந்தனையாக, ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் ரூ.18.5 கோடி (சுமார் $2 மில்லியன்) கட்டணம் வசூலிக்க அனுமதி கோரியுள்ளது.
இது அனுமதிக்கப்பட்டால், கப்பல் போக்குவரத்து செலவு உயரும், இறுதியில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவின் இறக்குமதி செலவை பாதிக்கக்கூடும்.
மொத்தத்தில், இந்த அறிவிப்பு உலகப் பங்குச் சந்தைகளிலும் ஆசிய சந்தைகளிலும் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு குறுகிய கால அட்வான்டேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், நீண்ட கால அமைதி ஏற்படும் வரை முழு நிம்மதி இல்லை. முதலீடுகளில் கவனமும், பொருளாதாரக் கொள்கைகளில் விழிப்புணர்வும் தேவை.
Summary in English : US President Trump has announced a two-week temporary ceasefire with Iran, which Iran has accepted. This development is expected to ease global tensions. In India, stock markets are likely to rise today with reduced volatility. Oil prices have already fallen, which will lower import costs. The Indian rupee may stabilize against the dollar. Shipping routes through key areas could resume normally, improving supply chains.

