சென்னை : நடிகை திவ்யா சத்யராஜ் இன்று மாலை நுங்கம்பாக்கத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். குடும்பத்துடன் வாக்களித்த அவர், உயர் வாக்கு சதவீதத்தை வரவேற்று, அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தினார்.
வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய திவ்யா, “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் கண்டிப்பா ஓட்டு போடணும்” என்றார். இந்த முறை வாக்கு சதவீதம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறிய அவர், “ரொம்ப எக்சைட்டிங்காதான் இருக்கு” என்று பகிர்ந்துகொண்டார்.

வாக்கு சதவிகிதம் உயர்ந்தாலே அது ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் என்பது வரலாறு, அது போல தமிழ்நாட்டில் மாற்றம் வருமா? என்ற கேள்வுக்கு, “முன்னேற்றம் தான் வேணும். மாற்றம் வேண்டாம்” என திவ்யா பதிலளித்தார். திமுகவுக்காக முன்பு பிரசாரம் செய்த அவர், இன்று கிளினிக்கில் பணி முடிந்த பின்னர் மாலையில் வாக்களிக்க வந்ததாகத் தெரிவித்தார்.
அண்ணன் சிபி ராஜ், வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து கொண்டு வாக்கு செலுத்த வந்ததை பற்றி கேட்டபோது “அப்பா வந்து கருப்புல வந்தாரு. அண்ணன் நீங்க சொன்ன கலர்ல ட்ரஸ் பண்ணிக்கிட்டு வந்தாரு, என் கண்ணுக்கு என்ன டிரஸ் போட்டாலும் ரெண்டு பேருமே அழகாதான் தெரிவாங்க” என்று சிரித்தபடி கூறினார். “ரெண்டு பேரும் அழகா இருந்தாங்க” எனவும் புகழ்ந்தார்.
சமூக ஊடகங்களில் திமுகவில் மாற்றங்கள் பற்றிய பேச்சுகள் குறித்து குறிப்பிடப்பட்டதற்கு, “தமிழ்நாட்டில் ரைஸ் வி ஆர் அன்ஸ்டாப்பபிள். நாங்கதான் ஜெயிப்போம்” என எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது பற்றி இப்போது கணிப்பு சொல்ல விரும்பவில்லை என திவ்யா தெரிவித்தார்.
“இன்று எங்களுக்கு ஃபேமிலி கெட் டுகெதர். எல்லோரும் ஒண்ணா இருக்கோம். இட்ஸ் ஃபேமிலி டே” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழ்நாட்டில் அதிக வாக்கு சதவீதத்துடன் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரபலங்களின் வாக்குப் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
Summary in English : Divya Sathyaraj cast her vote in the evening at Nungambakkam along with her family. She expressed happiness over the high voter turnout and urged everyone to vote. She noted that her father and brother looked good in black attire and described the day as a family get-together. She expected progress to continue.
