ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து நடந்த திருமணத்தில், முதலிரவு அறைக்குள் நுழைந்த மணப்பெண் தனது கணவரிடம் அதிர்ச்சி தரும் உண்மையை வெளிப்படுத்தினார்.
அவர் சொன்னதை கேட்டதும் மாப்பிள்ளை பதறி அடித்துக் கொண்டு அறையை விட்டு ஓடி வெளியே வந்தார். இந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உறைய வைத்துள்ளது.

சம்பவம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு சிறிய நகரில் நடந்தது. மணமகன் விக்ரம் சிங் (வயது 28), உள்ளூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். மணமகள் பூஜா ராஜ்புத் (வயது 25). இரு குடும்பங்களும் நல்ல வரனாகப் பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின் முதலிரவு அறைக்குள் பூஜா நுழைந்த சில நிமிடங்களில், “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்” என்று தொடங்கினார். விக்ரம் சிங் “பேசுங்கள், எதுவும் பிரச்சனை இல்லை” என்று கூறியதும், பூஜா தன் இரகசியத்தை வெளியிட்டார்: “நான் என்னுடன் படித்த ஒருவரை காதலித்தேன்.
நிச்சயதார்த்தத்துக்குப் பிறகும் அவருடன் உறவு வைத்திருந்தேன். அதன் விளைவாக நான் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் இந்தக் குழந்தையை வைத்து வாழ்க்கை நடத்தலாம். இல்லையென்றால் கருவை கலைத்துவிட்டு புதிதாகத் தொடங்கலாம்.”
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த விக்ரம் சிங் உடனடியாக அறையை விட்டு வெளியே ஓடி வந்தார். குடும்பத்தினர் விசாரித்தபோது உண்மை வெளியானது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பூஜா தன் காதலனுடன் தொடர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அன்றிரவே விக்ரம் சிங்கின் குடும்பத்தினர் ஜெய்ப்பூர் போலீசில் புகார் அளித்தனர். “கர்ப்பமாக இருந்த பெண்ணை ஏமாற்றி எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.இந்த திருமணம் செல்லாது” என்று கூறினர்.
பூஜாவின் வாக்குமூலத்தையும் பதிவு செய்த போலீசார், ஏமாற்றுதல், திருமணத்தை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது வழக்கு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
விக்ரம் சிங்கின் பெற்றோர் ராஜேந்திர சிங் மற்றும் சுஷ்மா சிங் கூறுகையில், “எங்கள் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தப் பெண் வசதிக்காக எங்கள் மகனை திருமணம் செய்து கொண்டு அவரது வாழ்க்கையை நாசம் செய்துவிட்டாள்.
இனி அடுத்த திருமணத்துக்கு செல்லும்போது ‘ஏற்கனவே ஒரு திருமணம் தோல்வியில் முடிந்தது’ என்று விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்துக்கு பெரும் துயரம்” என்று கண்ணீர் மல்கினர்.
இந்தச் சம்பவம் ராஜஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நிச்சயதார்த்தத்துக்குப் பிறகும் காதலனுடன் உறவு வைத்து கர்ப்பமாகி, பிறகு வேறொருவரை திருமணம் செய்து கொண்டது” என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மணமகள் பூஜாவை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த காரனந்தினால் தற்போது தன் காதலன் வீட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரமான சம்பவம், திருமணம் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்றுகளுக்கு எதிராகப் பலரையும் எச்சரிக்கை செய்யும் வகையில் அமைந்துள்ளது.
Summary in English : In Rajasthan, a bride revealed to her new husband on their first night that she was three months pregnant by another man. The wedding took place four months after their engagement. The husband's family filed a police complaint and the matter reached court. This situation has created difficulties for the groom's future marriage plans.
