1998-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘அவள் வருவாளா’ திரைப்படத்தில் வரும் ஒரு கொடூரமான காட்சி... பிரிதிவிராஜ் நடித்த பவளமணி என்ற கதாபாத்திரம், தன் மனைவியான சிம்ரனை பணத்துக்காக நண்பர்களுக்கு விருந்தாக்கும் அந்த வக்கிரம் நிறைந்த காட்சி. திரையரங்கில் அந்தக் காட்சியைப் பார்த்த பலரும் கோபத்தின் உச்சிக்கு சென்றனர்.
அந்தக் காட்சி வெறும் திரைப்படக் கற்பனை என்று நினைத்திருந்தோம். ஆனால் 2026-ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் அந்தக் கொடூரம் நிஜமாகவே அரங்கேறியுள்ளது.

கதை தொடங்கும் இடம் – பாலன்பூர், குஜராத்
12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவன் நிகேஷ் பட்டேல் (30), மனைவி (26). திருமணத்துக்குப் பிறகும் நிகேஷ் இரண்டு பெண்களுடன் தகாத உறவில் இருந்தார். இது மனைவிக்குத் தெரியவந்ததும் வீட்டில் சண்டை, வாக்குவாதம் தொடர்ந்தது. விவாகரத்து கேட்ட நிகேஷுக்கு மனைவி சம்மதிக்கவில்லை.
தன் காதல் வாழ்க்கைக்கு இவள் தடையாக இருப்பதாக நினைத்த நிகேஷ், ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார்.
சில வாரங்களுக்கு முன்பு, “சுற்றுலா போகலாம்” என்று மனைவியை அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு அவளை ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்தார். பின்னர் தன் நண்பர்களான சஞ்சய் தாக்கூர், அசோக் தாக்கூர், சச்சின் தாக்கூர் உள்ளிட்ட ஏழு பேரை அழைத்தார். ஒவ்வொருவரிடமும் 50,000 ரூபாய் வாங்கி, தன் சொந்த மனைவியை அவர்களுக்கு “விற்றான்”.
அந்த ஏழு பேரும் அந்தப் பெண்ணை 10 நாட்களுக்கு மேலாக ஒரு தனி அறையில் அடைத்து வைத்து, மிருகத்தனமான கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். உச்சகட்டமாக அந்த பெண்ணின் முன்னழகு முனைப்பகுதியை கடித்தே எடுத்துள்ளனர். மேலும், அவளது நகைகளைப் பறித்து, கடுமையான சித்திரவதையும் செய்தனர்.
கணவனின் தந்திரம்
இந்த கொடூரத்தை பார்த்த கணவன் எப்படியும் மனைவி உயிரிழந்து விடுவாள் என்று பயந்து, தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நிகேஷ் ஒரு பொய் நாடகத்தை அரங்கேற்றினான்.
பாலன்பூர் காவல் நிலையத்துக்குச் சென்று, “என் மனைவியைக் காணவில்லை, கண்டுபிடியுங்கள்” என்று போலி புகார் கொடுத்தான். இதன் மூலம் காவல்துறை மற்றும் உறவினர்களின் சந்தேகத்திலிருந்து தப்பினான்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, போலீசார் தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தலைமறைவானான்.
போலீசின் தீவிர விசாரணை
கணவன்-மனைவி இருவரும் காணாமல் போனதால் சந்தேகம் அடைந்த பாலன்பூர் போலீசார், துணை கண்காணிப்பாளர் ஆர்.கே. பட்டேல் தலைமையில் தனிப்படை அமைத்தனர். செல்போன் டிரேசிங் மூலம் நிகேஷை முற்றுகையிட்டு பிடித்தனர்.
விசாரணையில் நிகேஷ் உடைந்து போனான். “பணத்துக்காக மனைவியை நண்பர்களிடம் விற்றேன்” என்று ஒப்புக்கொண்டான். உடனடியாக போலீசார் அந்த ரகசிய இடத்துக்குச் சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டனர்.
மேலும் சஞ்சய், அசோக், சச்சின் உள்ளிட்ட ஏழு பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
வழக்கு மற்றும் தற்போதைய நிலை
இவர்கள் மீது கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், கொள்ளை உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை பெற்று வருகிறார்.
ஒரு திரைப்படத்தில் கண்டு அதிர்ச்சியடைந்த அதே கொடூரம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிஜ வாழ்க்கையில்... அதுவும் ஒரு கணவனால் தன் மனைவிக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி முழு நாட்டையும் அதிர வைத்துள்ளது.
English Summary : In 2026, Gujarat's Palanpur resident Nikesh Patel, facing family disagreements, took his wife on an outing and kept her in a hidden room. He accepted money from seven friends and handed her over to them. The group held her for more than ten days. Police later rescued the woman and arrested Nikesh along with the seven men.