காமம் தலைக்கேறிய பெண் செய்த அசிங்கம்! துடிதுடித்து இறந்த மகன்! நினைத்து பார்க்க முடியாத கொடூரம்

சித்தூர் மாவட்டத்தின் அமைதியான ஒரு சிறு கிராமத்தில், வெயில் கொளுத்தும் கட்டிட வேலைக்காக வெளியூர் சென்றிருந்த அருண்குமாரின் வீட்டில் ஒரு இரவு, பயங்கரமான சம்பவம் நடந்தது.

33 வயதான லாவண்யா, தன் 9 வயது மகன் ஆதவை படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் ஊரையே கூட்டி "என் மகன் தூங்கியபடியே இறந்துவிட்டான்" என்று கண்ணீர் விட்டு அழுதார்.

அன்றிரவு, வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த மீனாட்சி பாட்டி, திடீரென குழந்தையின் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். ஏன் பையன் கத்துறான்.. என்ன ஆச்சு என்று வீட்டு வாசலில் வந்து கேட்டுள்ளார்.

ஆனால், லாவண்யா வெளியே வந்து "பையன் கொஞ்சம் அட்டகாசம் பண்ணினான், அதான் கொஞ்சம் அடித்தேன்" என்று சொல்லி விஷயத்தை மூடி மறைத்துவிட்டார். சில மணி நேரம் கழித்து, "என் மகன் தூங்கியபடியே இறந்துவிட்டான்" என்று ஊரை கூட்டி அழுதார் லாவண்யா.

கட்டிட வேலைக்காக வெளியூரில் இருந்த அருண்குமார், செய்தியைக் கேட்டதும் உடனடியாக வீடு திரும்பினார். மகனுக்கு எந்த நோயும் இல்லை, சாப்பிட்டதிலும் சந்தேகம் ஏதும் இல்லை என்று பார்த்த அவர், மனைவியிடம் விசாரித்தார்.

அப்போது மீனாட்சி பாட்டி அவரை அழைத்து, "உன் பையன் பயங்கரமா கத்துனான்... என்னை விடுங்கன்னு..." உடனே நான் போய், ஏன் பையன் கத்துறான்னு போய் கேட்டேன்.. அது உன் பொண்டாட்டி பையன் அட்டகாசம் பண்ணான்.. அதான்.. அடிச்சேன்னு" சொன்னா.. நான் வந்துட்டேன் என சொன்னதும், அருண்குமாருக்கு சந்தேகம் எழுந்தது.

அவர் உடனடியாக லாவண்யாவை அழைத்து, "ஏன் பையனை அடிச்சே? என்ன நடந்தது?" என்று கேட்டார். முதலில் "நான் அடிக்கவே இல்லை" என்று மறுத்த லாவண்யா, பின்னர் "அவன் அட்டகாசம் பண்ணினான் அதான்" என்று முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இந்த பேச்சு அருண்குமாருக்கு தீவிர சந்தேகத்தை ஏற்படுத்தியது. உறவினர்களுடன் சேர்ந்து அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு, ஆதவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். லாவண்யாவை விசாரித்தபோது அவரும் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தார்.

பின்னர் அவரது செல்போன் கால் ஹிஸ்டரியை சோதித்தபோது, ஒரு நபருடன் தினமும் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு வினோத் என்ற அந்த நபரை அழைத்து விசாரித்தனர்.

வினோத் முதலில் "எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை" என்று மழுப்பினாலும், காவல்துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளியானது. லாவண்யாவும் வினோத்தும் கள்ளத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அருண்குமார் கடன் பிரச்சனை காரணமாக வெளியூர் சென்றிருந்ததை பயன்படுத்தி, இருவரும் தொடர்பில் இருந்து வந்தனர்.

சம்பவத்தன்று, விளையாடச் சென்றிருந்த ஆதவ், திடீரென வீட்டுக்கு வந்து தன் அம்மா லாவண்யாவும் வினோத்தும் இருந்த கொடூரமான காட்சியைப் பார்த்துவிட்டான்.

அதைப்பற்றி அவன் தன் அப்பாவிடம் சொல்லிவிடுவான் என்ற பயத்தில், லாவண்யா தன் மகனை கழுத்தை நெறித்து கொலை செய்தார். "என்னை விடுங்க... அம்மா... என்னை விடுமா..." என்று ஆதவ் துடித்த துடிப்பில் கத்தியதை அவர் பொருட்படுத்தவில்லை. கொலை செய்த சில மணி நேரம் கழித்து, ஊரைக் கூட்டி அழுது இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தார்.

காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பிறகு லாவண்யாவையும், அவரது கள்ளக் காதலன் வினோத்தையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சித்தூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "தாய் என்ற பெயரில் இப்படி ஒரு கொடூரம் நடக்கும் என்று நம்பவே முடியவில்லை" என்று உள்ளூர் மக்கள் கண்ணீர் விட்டு வருந்துகின்றனர்.

காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம், குடும்ப உறவுகளின் நம்பகத்தன்மை மற்றும் பெற்றோர் பொறுப்பு பற்றி பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Summary in English : In a Chittoor village, a 33-year-old woman was interacting with her acquaintance at home when her nine-year-old son returned unexpectedly. The boy later passed away while sleeping. The father became doubtful after speaking with neighbours. Police examined phone records and questioned the individuals, leading to both being taken into custody.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!