நியூயார்க் : உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான JPMorgan Chase-இன் மூத்த நிர்வாக இயக்குநரும், லெவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் துணைத் தலைவருமான லோர்னா ஹஜ்டினி (37) மீது பாலியல் துன்புறுத்தல், மருந்து கொடுத்து அத்துமீறல், இனவெறி தாக்குதல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவரது ஜூனியர் ஆண் பணியாளரான ‘ஜான் டோ’ என்ற இளைஞர் நியூயார்க் கவுண்டி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய தொடர் அத்துமீறல்களை விவரித்துள்ளார்.

இருவரும் ஒரே ப்ராஜெக்டில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியதிலிருந்தே லோர்னாவின் நடத்தை மாறத் தொடங்கியதாக ஜான் கூறுகிறார். ஒரு நாள் அலுவலக மேசை அருகே லோர்னா தனது பேனாவை வேண்டுமென்றே தரையில் போட்டுவிட்டார்.
அதை எடுக்கக் குனிந்த ஜானின் காலை அவர் கையால் தடவியபடி, ஆபாசமான வார்த்தைகளில் பேசி, அவரது கெண்டைக்காலை வக்கிரமாக அழுத்தினார். அதன் பிறகு அத்துமீறல்கள் அதிகரித்தன.
“மது அருந்த வருகிறாயா?” என்று ஜானை அழைத்த லோர்னா, அவர் மறுத்ததும், “இன்னைக்கு நான் சொன்ன இடத்துக்கு வரவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவேன்” என்று மிரட்டினார்.
2024 செப்டம்பரில் மற்றொரு சம்பவம். பணி உயர்வை ரத்து செய்துவிடுவதாக மிரட்டி, உடலுறவுக்கு அழைத்தார். ஜான் ஒத்துழைக்காததால் கோபமடைந்த லோர்னா, மயக்க மருந்தையும், ஆணுறுப்பு விறைப்பைத் தூண்டும் மருந்தையும் கொடுத்தார்.
ஒரு நாள் இரவு லோர்னா நேரடியாக ஜானின் வீட்டுக்கே வந்தார். அங்கு மயங்கிய நிலையில் இருந்தார் ஜான். ஆனால், அவருடைய உறுப்பு மட்டும் மருந்தின் காரணமாக விறைத்த நிலையில் இருக்கவே அவருடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
சத்தம் கேட்டு வந்த அவரது மனைவியை ஆபாசமாக வசைபாடினார். வலுக்கட்டாயமாக வாய்வழி புணர்ச்சியில் ஈடுபட்டபோது ஜான் கண்ணீர் விட்டு அழுதார். அப்போதும் லோர்னா கோபமடைந்து, அவரை மிக மோசமாக வசைபாடினார். இனவெறி சொற்களால் ஜானை அவமானப்படுத்தியதும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜான் வங்கியின் உள்ளகப் புகார் பிரிவுக்கு புகார் அளித்தார். பல ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். ஆனால் ஜான் முழுமையாக ஒத்துழைக்கவில்லை, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வங்கி நிர்வாகம் அவரது புகாரை நிராகரித்தது. இதனால் வேலை இழக்கும் பயத்தில், வேறு வேலை தேட முடியாத நிலையில், ஜான் நீதிமன்றத்தை நாடினார்.
லோர்னா ஹஜ்டினி இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த நபருடன் எந்தவித முறையற்ற நடத்தையிலும் நான் ஈடுபடவில்லை. பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு நான் ஒருபோதும் செல்லவில்லை” என்று தெரிவித்தார்.
லோர்னா ஹஜ்டினி யார்?
நியூயார்க் ஸ்டெர்ன் வணிகப் பள்ளியில் நிதி மற்றும் புள்ளியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். JPMorgan Chase-இல் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி படிப்புகளை முடித்தவர். நுகர்வோர், சில்லறை வர்த்தகம், மருத்துவத் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஆழமான அனுபவம் கொண்டவர்.
இந்த வழக்கு தற்போது நியூயார்க் கவுண்டி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜான் இன்னும் அதே வங்கியில் பணியாற்றி வருகிறார். “நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய வங்கியில் நடந்த இந்த சம்பவம், பணியிட பாலியல் துன்புறுத்தல் குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : JPMorgan Chase senior executive Lorna Hajdini faces a lawsuit from a junior male employee. The complaint alleges repeated unwanted advances, professional threats, and improper conduct starting in 2024. Hajdini denies all claims, stating she never engaged in any inappropriate behavior. The case is now proceeding in New York court.