ரவி மோகன் பேச்சுக்கு குஷ்பூ கொடுத்த பதிலை பாருங்க! கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா உலகில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம்.

இந்த சர்ச்சையில் நடிகை குஷ்பூ சுந்தர் தீவிரமாக ஈடுபட்டு, சமூக வலைதளங்களில் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு ஜெயம் ரவி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ள நிலையில், ரசிகர்கள் இடையேயும் கடும் விவாதம் எழுந்துள்ளது.

குஷ்பூவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

நேற்று குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பைப் பகிர்ந்தார். அதில் பைபிளின் வார்த்தைகளை நம்புபவர்களுக்கு, “உங்களுடையதல்லாததை எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று எச்சரித்தார்.

மேலும், “உங்கள் செயல்களே உங்களை வரையறுக்கின்றன” என்றும் கூறினார். ஒருவர் நம்பிக்கையைத் துரோகம் செய்து திருடுவது அவர்களின் DNA-யில் உள்ளது என்பதை நிரூபித்துவிட்டதாகவும், ஏமாற்றுலகம்தான் அவர்களுக்கு வசதியான இடம் என்றும் பதிவிட்டார்.

இந்தப் பதிவு ஜெயம் ரவியின் தற்போதைய உறவு குறித்து (கெனிஷா பிரான்சிஸ்) மறைமுகமாக சாடுவதாகக் கருதப்படுகிறது. “அந்த ஒரு மனிதாபிமானமற்றவனை குறை கூறுவதில் அர்த்தமில்லை — அவன் தன் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறான்.

நிழலில் ஒளிந்துகொண்டு, அப்படிப்பட்டவர்களுக்கு பேச்சு தளத்தை கொடுத்தவரைத்தான் நான் குறை கூறுகிறேன்” என்று குஷ்பூ தனது பதிவில் குறிப்பிட்டார். பைபிள் குறிப்பை இணைத்து, “தூய இதயமும் சுத்தமான மனமும் உள்ளவர்கள் கடவுளுக்கு அருகில் இருப்பார்கள்” என்றும் அவர் சேர்த்தார்.

ஜெயம் ரவியின் பதிலடி

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தனது குடும்ப விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக ஒரு நடிகையை (குஷ்பூ) மறைமுகமாக சாடினார்.

“மூன்றெழுத்து இட்லி நடிகை என்னுடைய குடும்பத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைகிறார். அவள் தான் இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம்” என்று கூறிய அவர், “அவர் வயதில் இருக்கக்கூடிய மூன்று நடிகர்கள் என்னிடம் எங்களுடைய குடும்பத்தை அளிக்க பார்த்த மோசமான ஒரு பெண்” என்றும் விமர்சித்தார்.

“நீ எல்லாம் என்னுடைய குடும்பத்தை பற்றி பேசலாமா? நீயெல்லாம் என்னைப் பற்றி பேச அருகதை இருக்கிறதா?” என்று கடுமையாகப் பேசினார். இது குஷ்பூவை நேரடியாகக் குறிப்பிடாமல் “மூன்றெழுத்து இட்லி” என்று அழைத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஷ்பூவின் ட்விட்டர் (X) பதில்

இதற்கு உடனடியாக பதிலளித்த குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில், “சிலர் தங்கள் DNA-வை நிரூபிக்கவே மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். என்னை சரி என்று நிரூபித்ததற்கு நன்றி” என்று எழுதினார். இது ஜெயம் ரவியின் பேட்டிக்கு நேரடி பதிலாகப் பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் எதிர்வினை

இந்த சர்ச்சையில் ரசிகர்கள் குஷ்பூவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர், “நீங்கள் இன்னொருவர் குடும்பத்தில் ஃபெமினிஸம் என்ற பெயரில் உள்ளே நுழைந்து கருத்து சொல்வதை முதலில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு மோசமான பெண் என்பதை நிரூபிக்காதீர்கள். இந்த பிரச்சினையில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மற்றவர்கள் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக குஷ்பூவை பாராட்டுகின்றனர்.

 

பின்னணி

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையேயான 18 ஆண்டுகால திருமணம் கடந்த ஆண்டு பிரிந்தது. இருவரும் இரு மகன்களுக்கு தந்தை-தாய். ஆர்த்தி சமீபத்தில் உணர்ச்சிகரமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டு, தந்தையின் பொறுப்புகளை ரவி தட்டிக் கழிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

ரவி கெனிஷா பிரான்சிஸுடன் பொது இடங்களில் தோன்றியது இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்தது. குஷ்பூ ஆர்த்திக்கு ஆதரவாக “ஒரு தாயின் உண்மை நிலைத்து நிற்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வரும் நிலையில், அடுத்த கட்ட வளர்ச்சிகள் என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Summary in English : Actress Kushboo shared an Instagram post quoting Bible verses and commenting on personal actions and interference in others' lives. Actor Jayam Ravi responded in an interview by criticizing a senior actress for meddling in his family issues. Kushboo later replied on X, noting some people strongly prove their character.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!