திண்டுக்கல் : வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியைத் திருமணம் செய்து, பணம் மற்றும் நகைகளைத் திருடி மர்மமாக மாயமான மணப்பெண் மற்றும் திருமண புரோக்கர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பழனி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகிலுள்ள கோதை மங்கலம் பகுதியைச் சேர்ந்த நேரு மகன் பாலகிருஷ்ணன் (29). இவர் பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி. எனவே வெளியில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது தாய் தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்ய வரன் தேடப்பட்டு வந்தது. அப்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் கிருஷ்ணவேணி (57), சித்ரா (36) மற்றும் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜோசப் (62) ஆகியோர் நேரு குடும்பத்தினருக்கு அறிமுகமாகினர்.
இவர்களின் மூலம் சாத்தூர் படந்தால் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமி (26) என்ற பெண்ணை கடந்த 2025 டிசம்பர் மாதம் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமண புரோக்கர் கமிஷனாக பாலகிருஷ்ணன் தரப்பில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டனர். மேலும் மணப்பெண்ணுக்கு 10 கிராம் தங்க நகையும் போடப்பட்டது.
திருமணத்துக்குப் பின் பாலகிருஷ்ணனுடன் முதலிரவு நடந்துள்ளது. சுமார் 10 நாட்கள் குடும்ப வாழ்க்கை நடத்திய ராமலட்சுமி, சரியாக பத்தாவது நாள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு மர்மமான முறையில் தலைமறைவானார்.
ராமலட்சுமியைத் தொடர்புகொள்ள முயன்றபோது, புரோக்கர்களும் தலைமறைவானதை அறிந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, கடந்த ஜனவரி மாதம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், இது ஒரு திட்டமிட்ட மோசடி என்பதை கண்டறிந்து, மணப்பெண் ராமலட்சுமி, புரோக்கர்கள் கிருஷ்ணவேணி, சித்ரா, ஜோசப் ஆகிய நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல், திருமணம் என்ற பெயரில் மோசடி செய்கிறோம் என்பதை தாண்டி, முதலிரவில் உடலுறவு கொண்டாடிய விசித்திரமான இந்த பெண்ணின் விபரீத ஆசை பொதுவெளியில் புதிதாக வரன் தேடும் பணியில் இருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளியின் பலவீனத்தைப் பயன்படுத்தி முறையில் பணம் பறிக்கும் வகையில் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : A 29-year-old hearing and speech impaired man from near Palani married a 26-year-old woman arranged by three brokers in December 2025. The family paid 2.5 lakh rupees commission and gave gold jewellery. After ten days the woman left with cash and valuables. The brokers also went missing. Police arrested all four following a complaint.