மாற்றுதிறனாளி ஆணுடன் விசித்திர உடலுறவு.. இளம்பெண்ணின் விபரீத ஆசை.. தட்டி தூக்கிய போலீஸ்..!
திண்டுக்கல் : வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியைத் திருமணம் செய்து, பணம் மற்றும் நகைகளைத் திருடி மர்மமாக மாயமான மணப்பெண் மற்றும் திருமண புரோக்கர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பழனி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகிலுள்ள கோதை மங்கலம் பகுதியைச் சேர்ந்த நேரு மகன் பாலகிருஷ்ணன் (29). இவர் பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி. எனவே வெளியில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது தாய் தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்ய வரன் தேடப்பட்டு வந்தது. அப்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் கிருஷ்ணவேணி (57), சித்ரா (36) மற்றும் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜோசப் (62) ஆகியோர் நேரு குடும்பத்தினருக்கு அறிமுகமாகினர். இவர்களின் மூலம் சாத்தூர் படந்தால் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமி (26) என்ற பெண்ணை கடந்த 2025 டிசம்பர் மாதம் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமண புரோக்கர் கமிஷனாக பாலகிருஷ்ணன் தரப்பில் இருந்து 2.5...