“கெனிஷாவ காலி பண்ணி அனுப்பிட்டீங்க.. சும்மா விட மாட்டேன் உங்கள..” கண்ணீர் விட்டு கதறிய ஜெயம் ரவி!

சென்னை : நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனது தனிப்பட்ட வாழ்க்கை சவால்கள் குறித்து கண்ணீர் விட்டபடி நேர்காணல் அளித்துள்ளார். பெண்களுக்கான உரிமை, குழந்தைகளுடன் தொடர்பு, பிரிவு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்டவற்றை விரிவாகப் பகிர்ந்துகொண்ட அவர், தன்னை ஒரு பெமினிஸ்ட் என்றும் வலியுறுத்தினார்.

“நானும் பெமினிஸ்ட் தான்… 14 வருஷம் பொறுத்துக்கிட்டேன்”

பேட்டியில் ரவி மோகன், “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? பெமினிசம்னா நானும் பெமினிஸ்ட் தான். என் குடும்பத்துக்கு எதிரா எப்படி பேசுவேன்? 14 வருஷம் பொறுத்துக்கிட்டேன்” என்று கூறினார். தான் பெண்களின் உரிமைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததாகவும், அவர்களைப் பெரிய சக்தியாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

குழந்தைகளைப் பார்க்க முடியாத வேதனை

தனது இரு மகன்களைப் பார்க்க அனுமதிக்கப்படாத வலியை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்திய அவர், “என் லைஃப்ஸ் ஹேப்பியஸ்ட் டே என்று ட்வீட் செய்த நாளில் இருந்து பிரச்னை. டிக் டிக் டிக் படம் நடிக்கும்போது என் பிள்ளைகளை எப்படி விட்டுவிடுவேன்? 50 லட்சம் ரூபாய் ஸ்கூல் பீஸ். எத்தனை வருஷமாக நான் கட்டி வருகிறேன். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்றுதான்” என்றார்.

மேலும், “டெய்லி இரவு என் சின்ன பையனுடன் சேஸ் விளையாடி தோற்றுப் போவேன். குழந்தைகள் மீது அன்பு இல்லை என்று சொல்பவர்கள், போனை பறிமுதல் செய்து, பாடிகார்டு அனுப்பி வைக்கிறார்கள். என் பிள்ளைகளைப் பார்க்க விடுங்கள். இந்த வீடியோவைப் பார்த்துதான் ஓடி வந்தேன்” என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

“எக்ஸ் குடும்பம் இன்டர்வியூ கொடுப்பது சர்ப்ரைஸ்”

தனது முன்னாள் மனைவியின் குடும்பத்தினர் இன்டர்வியூ கொடுப்பது தனக்கு ஆச்சரியம் என்று குறிப்பிட்ட ரவி மோகன், “யாராவது பார்த்திருக்கீங்களா? எனக்கே தெரியாது. சர்ப்ரைஸ். என் மாப்பிள்ளை ஏன் இது ஏன் என்று கேட்கிறார். நான் பாட்டுக்கு இருந்திருக்கலாம். ஆனால் சுரண்டி சுரண்டி இரத்தம் வரும் அளவுக்கு செய்தார்கள்” என்று தெரிவித்தார்.

தான் வாடகை வீட்டில் இருப்பதாகவும், அவர்கள் பெரிய வீட்டில் இருப்பதாகவும் ஒப்பிட்ட அவர், “நான் எதுவுமில்லாமல் வெளியே வந்தவன். அவர்கள் நல்லா இருக்கிறார்கள்” என்றார்.

சைபர் புல்லிங் மற்றும் எதிர்கால திட்டம்

சைபர் புல்லிங்கை கண்டிக்கும் ரவி மோகன், “உங்களை எல்லாம் சும்மா விடப் போவதில்லை. என் அண்ணனுக்கு நடந்ததை தம்பிக்கும் நடக்க விடமாட்டேன்” என்று எச்சரித்தார். தனக்கு உண்மையான ஆதரவாளர்கள் இருப்பதாகவும், கார்த்தி, பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் உதவியதாகவும் குறிப்பிட்டார்.

“ஒரு நாளில் என் டைவர்ஸை முடித்துவிடுவேன். பசங்க என்று ஒரு காலில் வாயை மூடிக்கொண்டிருந்தேன். எல்லா ப்ரூஃப்களும் வெளிய வரும். அவர்கள் குடும்பத்திலிருந்தே வரும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த உணர்ச்சி நிறைந்த பேட்டி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனின் தனிப்பட்ட விஷயங்கள் விரைவில் சுமுகமாக தீர்வு காண வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Summary : Jayam Ravi gave an emotional personal interview, describing himself as a feminist who supported his family for 14 years. He shared his sadness over not being able to meet his children, spoke about their school expenses, and daily moments with his son. He mentioned living in a rental house while requesting patience and understanding from supporters.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!