“கெனிஷாவ காலி பண்ணி அனுப்பிட்டீங்க.. சும்மா விட மாட்டேன் உங்கள..” கண்ணீர் விட்டு கதறிய ஜெயம் ரவி!
சென்னை : நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனது தனிப்பட்ட வாழ்க்கை சவால்கள் குறித்து கண்ணீர் விட்டபடி நேர்காணல் அளித்துள்ளார். பெண்களுக்கான உரிமை, குழந்தைகளுடன் தொடர்பு, பிரிவு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்டவற்றை விரிவாகப் பகிர்ந்துகொண்ட அவர், தன்னை ஒரு பெமினிஸ்ட் என்றும் வலியுறுத்தினார். “நானும் பெமினிஸ்ட் தான்… 14 வருஷம் பொறுத்துக்கிட்டேன்” பேட்டியில் ரவி மோகன், “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? பெமினிசம்னா நானும் பெமினிஸ்ட் தான். என் குடும்பத்துக்கு எதிரா எப்படி பேசுவேன்? 14 வருஷம் பொறுத்துக்கிட்டேன்” என்று கூறினார். தான் பெண்களின் உரிமைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததாகவும், அவர்களைப் பெரிய சக்தியாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். குழந்தைகளைப் பார்க்க முடியாத வேதனை தனது இரு மகன்களைப் பார்க்க அனுமதிக்கப்படாத வலியை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்திய அவர், “என் லைஃப்ஸ் ஹேப்பியஸ்ட் டே என்று ட்வீட் செய்த நாளில் இருந்து பிரச்னை. டிக் டிக் டிக் படம் நடிக்கும்போது என் பிள்ளைகளை எப்படி விட்டுவிடுவேன்? 50 லட்சம் ரூபாய் ஸ்கூல் பீஸ். எத்தனை வருஷமாக நான் கட்டி வருகிறேன். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என...