தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், எழுத்தாளர் கே.பாக்கியராஜ் இன்று காலை மறைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பரும், சமகால இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது இரங்கல் வீடியோவில் உணர்ச்சி பொங்க பாக்கியராஜுடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
ராஜேந்தர் தனது வீடியோவில், “சமீபத்தில்தான் அவரது 50 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் பொன்விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்பாபு உள்ளிட்ட பலர் வருகை தந்தனர். என்னையும் அவர் விரும்பி அழைத்தார்.

நாங்கள் ஒரே காலகட்டத்தில் பணியாற்றினோம், ஆனால் எந்தப் படத்திலும் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை என்று வருத்தப்பட்டார்” என்று கூறினார்.
மேலும், இயக்குநர் சாய்ராமணி இயக்கும் ‘கண்ணிடத்து பயிர்’ என்ற படத்தில் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதில் தானே பாடல்கள் எழுதி இசையமைக்க இருப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்தார். ஆனால், படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் இந்த துயரச் செய்தி வந்துள்ளது.
பாக்கியராஜ் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’, ‘மௌன கீதங்கள்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் என்பதையும் ராஜேந்தர் நினைவு கூர்ந்தார். “அவர் மறைந்த 16வது நாளில் நானும் பிரிவேன் என்று நினைக்கவில்லை” என்று உணர்ச்சி வசப்பட்டார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலுக்காக இன்று காலை 10 மணிக்கு மனு தாக்கல் செய்ய தயாராக இருந்த பாக்கியராஜ், விதியின் விளையாட்டால் எமலோகம் சென்றுவிட்டதாகவும் ராஜேந்தர் வருத்தம் தெரிவித்தார்.
இறுதியாக ராஜேந்தர் கூறியது:
“உம்மை இழந்து வாழக்கூடிய உங்கள் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இது.”
இந்த இரங்கல் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
English Summary : Veteran director D. Rajender released an emotional condolence video on the passing of K. Bhagyaraj. Recalling their long friendship and recent 50-year felicitation event attended by Rajinikanth and Mohan Babu, he expressed deep sorrow. Rajender also mentioned an upcoming film where Bhagyaraj was to act. He offered heartfelt condolences to the family and the film industry.