கர்நூல் மாவட்டத்தின் அதோனி பகுதியில், வறண்ட மண்ணும், எரிந்து போன வெயிலும் நிறைந்த ஒரு சிறிய குடிசை. அங்கே கங்கம்மா என்னும் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் சின்ன மல்லையா ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்த பிறகு, அவளது வாழ்க்கை ஒரு பெரிய வெற்றிடமாக மாறியிருந்தது.
அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தான் நரசிம்மலு. அதே ஊரைச் சேர்ந்தவன். முதலில் பழக்கம். பின்னர் பேச்சு. பின்னர் தனிமை. சீண்டல்கள், தொடுதல்களுடன் ஆழமாக சென்ற அவர்களின் இரவுகள் நீண்டன.

கங்கம்மாவின் உடலும் மனமும் காமம் என்ற தீயில் விழுந்தன. அவள் தன் 15 வயது மூத்த மகன் வீரேந்திராவின் கண்களில் இருந்து இந்த உறவை மறைக்க முயன்றாள். ஆனால், ஒரு முறை சிறுவன் நேரில் பார்த்தான். புரிந்தான். கோபமடைந்தான்.
"அம்மா... இது என்ன அசிங்கம்? அப்பா இறந்து எவ்வளவு நாள் ஆச்சு? இப்படி ஒரு ஆளோட..."
வீரேந்திராவின் கண்டனம் கங்கம்மாவின் இதயத்தை உலுக்கியது. ஆனால் அது அவளை மாற்றவில்லை. ருசி கண்ட பூனையாக நரசிம்மலுவின் பிடியில் பைத்தியமாக மாறினால். மகனுக்கு தெரிந்து விட்டது என திருந்திவிடுவாள் என்றார் பார்த்தால், மாறாக, பயத்தையும் கோபத்தையும் ஏந்தி. நரசிம்மலுவிடம் அவள் முறையிட்டாள். இருவரும் இரவு நேரங்களில் திட்டமிட்டனர்.
2024 நவம்பர் 10... இரவு.
குடிசையின் உள்ளே இருள் அடர்ந்திருந்தது. வீரேந்திரா தூங்கிக் கொண்டிருந்தான். தாயும், அவளது கள்ளக் காதலனும் அவனைச் சூழ்ந்தனர். ஒரு குரல் கூட எழவில்லை. இரவோடு இரவாக வீரேந்திராவின் உயிர் பறிக்கப்பட்டது. அந்தச் சிறுவனின் உடல் இருளில் இழுத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. மண் மேல் மண். ரத்தத்தின் மணம் மறைந்தது.
மறுநாள் மாலை, கங்கம்மா காவல் நிலையத்திற்குச் சென்று அழுதாள்."என் மகன் காலையில் இருந்து காணவில்லை சார்... எல்லா பக்கமும் தேடி பாத்துட்டேன்.."
போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேடுதல் தொடங்கியது. ஆனால், எந்த துப்பும் கிடைக்கவில்லை. வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் வீரேந்திரா எங்கும் இல்லை. கங்கம்மா நீதிமன்றத்திற்குச் சென்று அழுதாள். "என் மகனை இரண்டு வருடமாகக் கண்டுபிடிக்காத போலீசாருக்கு என்ன தண்டனை? எனக்கு நீதி வேண்டும்.." என்று வழக்கு போட்டாள். நீதிமன்றம் காவல் துறைக்கு கடும் உத்தரவிட்டது.
அப்போது தான் உண்மை வெளியே வரத் தொடங்கியது.
கங்கம்மாவின் செல்போன் கால் ஹிஸ்டரி, அவளது இரவு நேர உரையாடல்கள், நரசிம்மலுவுடனான தொடர்பு — அனைத்தும் போலீசாரின் கண்ணில் பட்டன. சந்தேகம் வலுத்தது. விசாரணை. முதல் கட்டத்தில் கங்கம்மா உடைந்தாள். அழுகையுடன், நடுக்கத்துடன், தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டாள்.
"என் மகன் என் கள்ளக் காதலை கண்டித்தான்... அதனால்..."
போலீசார் சுடுகாட்டுக்குச் சென்றனர். மண்ணைத் தோண்டினர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வீரேந்திராவின் எலும்புக்கூடு வெளியே வந்தது. பிரேதப் பரிசோதனை உறுதி செய்தது — கொலை.
கங்கம்மா கைது செய்யப்பட்டாள். ஆனால் சிறையில் அவளுக்கு திடீரென உடல் நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிகிச்சை பலனளிக்கவில்லை. நேரு முன்தினம், கங்கம்மா உயிரிழந்தாள். அவளது உடல் போலீசாரால் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் கதை முடியவில்லை.
நரசிம்மலு இன்னும் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான். இரவுகளில் அதோனியின் தெருக்களில் அவனைத் தேடும் போலீசாரின் காலடி ஒலி இன்னும் ஓயவில்லை.
ஊரே அதிர்ச்சியில் உறைந்தது.
"பெட்ரா தாயே தன் மகனைக் கொன்றாளா?""கள்ளக்காதலுக்காக 15 வயது சிறுவனை புதைத்தாளா?"
அதோனியின் வறண்ட மண்ணில் இன்றும் அந்தக் குடிசை நிற்கிறது. உள்ளே இரண்டு சிறிய குழந்தைகள் — வீரேந்திராவின் தம்பியும் தங்கையும் — தாயும் இல்லாமல், அண்ணனும் இல்லாமல், வெறும் இருளுடன் வாழ்கின்றனர்.
ஒரு தாயின் காமமும், ஒரு சிறுவனின் நேர்மையும் மோதிய இரவில், வென்றது இருள்.
முடிவு இன்னும் எழுதப்படவில்லை. நரசிம்மலு பிடிபடும் வரை... இந்தக் கொலைக்கதை முடியாது.
Summary : In Adoni of Kurnool district, widow Gangamma formed a close relationship with local man Narasimhulu. Her fifteen-year-old son Veerendra opposed it. The boy went missing in November 2024. After two years of search, police recovered his remains from a cemetery. Gangamma was taken into custody and later passed away in hospital. Her associate is still being traced.