இந்திய திரையுலகில் சில நடிகைகள் மட்டுமே தங்கள் ஆரம்ப காலப் படங்களிலேயே வெறும் கவர்ச்சி முகமாக மட்டும் இல்லாமல், அசாத்திய நடிப்புத் திறமையால் முழு திரை உலகின் கவனத்தையும் தங்களை நோக்கித் திருப்பி விடுகின்றனர். அத்தகைய அழுத்தமான நடிப்பு ஆளுமையாக உருவெடுத்திருப்பவர் நடிகை ருக்மிணி வசந்த்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட ருக்மிணி வசந்த், 2019-ம் ஆண்டு வெளியான பீக்பெல் ட்ரைலாஜி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அறிமுகப் படத்திலேயே வழக்கமான கமர்சியல் நாயகியாக இல்லாமல், கதையோடு பயணிக்கும் ஜான்வி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். முதல் படத்திலேயே அவரது எதார்த்தமான நடிப்பும் திரை ஆளுமையும் கன்னட சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது.
சப்த சாகரதாச்சை எல்லை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக ருக்மிணி வசந்த் மாறினார்.

இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராசி படத்தில் மானதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இந்திய திரையுலகையே மிரட்டிய காந்தாரா படத்தின் ப்ரீக்வெல் காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் ருக்மிணி வசந்த் பான் இந்திய அளவில் பிரபலமானார்.
தற்போது கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் டாக்சிக் என்ற மெகா பட்ஜெட் பீரியட் கேங்ஸ்டர் ஆக்ஷன் திரில்லரில் மெலிசா என்ற முதன்மை நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.
இதுமட்டுமின்றி, பான் இந்திய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் டிராகன் என்ற தெலுங்கு படத்திலும் ருக்மிணி வசந்த் கமிட்டாகியுள்ளார்.

இப்படி திரையுலகில் உச்சத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
AI உருவாக்கிய பிகினி போட்டோ சர்ச்சை
சமீபத்தில் இணையத்தில் ருக்மிணி வசந்தின் பிகினி உடையில் நீச்சல் குளத்தருகே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் வைரலாகின. திரையில் பெரும்பாலும் குடும்பப் பாங்கான உடைகளில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரை, இந்தப் புகைப்படங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தின. ரசிகர்கள் “தங்கப்பூவே.. புடவையிலும் பாரம்பரிய உடைகளிலும் பார்த்த எங்க தங்கப்பூவா இது” என்று வியந்தனர்.
இந்தப் புகைப்படங்கள் AI டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்று நடிகை ருக்மிணி வசந்த் தெளிவுபடுத்தினார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நானும் என் டீமும் இந்த AI பிகினி போட்டோக்கள் வைரலாவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளோம்.

அது நான்தான் என்று பலர் நம்பும் நிலையில், அது முழுக்க முழுக்க AI மூலம் உருவாக்கப்பட்டது. இந்த மோசமான செயலைச் செய்தவர்களை என் லீகல் டீம் மூலம் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப் போகிறேன்” என்று எச்சரித்தார்.
இது ஒருபக்கம் இருக்க இவருடைய அந்தரங்க காட்சிகள் என்று சில A.I காட்சிகளும் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் நடவடிக்கை
ருக்மிணி வசந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மத்திய சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். போலியான உள்ளடக்கங்களை முதன்முதலில் பகிர்ந்த மற்றும் பரப்பிய 29 முக்கிய சமூக ஊடக கணக்குகளை அடையாளம் கண்டனர். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார், சிவமொக்காவில் உள்ள சந்திரகாந்த், நாகச்சந்திராவில் வசிக்கும் ரஞ்சித் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்டா மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதங்கள் மூலம் ஐபி முகவரிகள் மற்றும் பதிவு விவரங்களைப் பெற்று இவர்களை அடையாளம் கண்டுபிடித்தனர்.

போலீசார் தெரிவித்தபடி, இந்த நபர்கள் AI படங்களைப் பரப்பியதன் மூலம் நடிகையின் நற்பெயருக்கும் தனிப்பட்ட அந்தஸ்துக்கும் தீங்கு விளைவித்துள்ளனர். அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதோடு, பொதுமக்கள் மத்தியில் தவறான சித்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்தக் குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்ட மூன்று செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ருக்மிணி வசந்த் தனது பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொள்ள வாழ்த்துகள் பலரிடமிருந்து குவிந்து வருகின்றன.
குறிப்பு: இந்தச் செய்தி பொது நலன் கருதி தயாரிக்கப்பட்டது. AI உருவாக்கிய உள்ளடக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Summary in English : Rukmini Vasanth, a talented South Indian actress known for her strong performances in Kannada and Tamil films, rose to pan-Indian fame with notable roles alongside leading stars. Recently, AI-generated images of her in a bikini went viral.
She clarified they were fake and filed a complaint. Bengaluru Cyber Crime police identified accounts and arrested three individuals.
