காட்டுத்தீயாக பரவும் காந்தாரா நடிகையின் அந்தரங்க காட்சி! கைதான 3 பேர்! பின்னணியில் நடந்த பகீர் சம்பவம்!
இந்திய திரையுலகில் சில நடிகைகள் மட்டுமே தங்கள் ஆரம்ப காலப் படங்களிலேயே வெறும் கவர்ச்சி முகமாக மட்டும் இல்லாமல், அசாத்திய நடிப்புத் திறமையால் முழு திரை உலகின் கவனத்தையும் தங்களை நோக்கித் திருப்பி விடுகின்றனர். அத்தகைய அழுத்தமான நடிப்பு ஆளுமையாக உருவெடுத்திருப்பவர் நடிகை ருக்மிணி வசந்த். கர்நாடக மாநிலம் பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட ருக்மிணி வசந்த், 2019-ம் ஆண்டு வெளியான பீக்பெல் ட்ரைலாஜி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே வழக்கமான கமர்சியல் நாயகியாக இல்லாமல், கதையோடு பயணிக்கும் ஜான்வி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். முதல் படத்திலேயே அவரது எதார்த்தமான நடிப்பும் திரை ஆளுமையும் கன்னட சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது. சப்த சாகரதாச்சை எல்லை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக ருக்மிணி வசந்த் மாறினார். இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் ஏ.ஆர். முரு...