GEM வீரமணி தான் அந்த சாரா? உள்ளே வரும் அண்ணா பல்கலை குற்றவாளி ஞானசேகரன்! வெளியே வந்த கொடூர ரகசியம்!
சென்னை: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வீரமணியின் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியதாகக் கூறப்படும் கணேசன் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அவரது செல்போனில் முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருந்ததாகவும், அந்த வீடியோக்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 23 ஆண்டுகள் பணியாற்றிய கணேசன் கைது போலீஸ் விசாரணையில் கணேசன் வீரமணியின் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்த அவர் பின்னர் வீரமணியின் தனிப்பட்ட பணிகளிலும் ஈடுபட்டதாகவும், வழக்குடன் தொடர்புடைய சி...