கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், மூணாறுக்கு அருகில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் குஞ்சித்தண்ணி. பச்சைப் பசேல் என்ற ஏலக்காய் தோட்டங்கள், மலைகள், மூடுபனி... இந்த ஊரில் தான் ராஜேஷும் பிரியாவும் வாழ்ந்து வந்தனர்.
ராஜேஷும் பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. வீட்டுப் பொருளாதாரமும் தள்ளாடியது.

"முதலில் பண பிரச்னையை சரி செய்துவிட்டு, பிறகு குடும்பத்தை பார்க்கலாம்" என்று ராஜேஷ் சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தார். மாதம் மூன்று லட்சத்திற்கு மேல் சம்பளம். ஆனால், நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே தங்க வேண்டிய சூழல்.
நான்கு ஆண்டுகள்...
ராஜேஷ் தினமும் வீடியோ கால் செய்வான். பிரியா சிரித்தபடி பேசுவாள். ஆனால், பிரியாவின் அந்த சிரிப்புக்குப் பின்னால் இருந்த தனிமையை அவன் உணரவில்லை.
பிரியா தனிமையைத் தாங்க முடியாமல், அருகில் இருந்த பிரபல ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் அருண் — வயது 37.
அழகான தோற்றம், பணக்கார குடும்பம். ஆனால் ஜோதிடர்கள் சொன்ன காரணத்தால் 42 வயது வரை திருமணம் செய்யக்கூடாது என்றும் அப்படி செய்தால் அவருக்கு ஆயுள் கண்டம் என்று கூறியதால் அவரது பெற்றோர் காத்திருந்தனர். இப்படி தனிமையின் பிடியில் சிக்கி இருந்தான் அருண்.
இந்த தனிமை அருணையும், பிரியாவையும் ஒன்றாக இழுத்தது.
மெல்ல மெல்ல பழக்கம்... பேச்சு... பிணைப்பு... சீண்டல்கள்.. ஒரு நாள் இருவரும் உல்லாச உலகில் பிரவேசித்தனர்.
மாலை மங்கிய நேரம், மழை வெளுத்து வாங்கியது, நள்ளிரவு வரை மழை தொடர்ந்தது, அந்த இரவில் அலுவலக அறைக்குள் தனியாக இருந்த அருணும், பிரியாவும் தங்கள் வரம்புகளை உடைத்துக்கொண்டு ஒன்றிணைந்தனர்.
தன்னுடைய அழகுகளை அருணுக்கு விருந்தாக்கினாள் பிரியா. அருணின் கைகள் பிரியாவின் அழகுகளுடன் விளையாட ஆரம்பித்தது. தனிமையின் பிடியில் இருந்த அவளின் பசி தற்போது அருணின் பிடிக்கு வந்தது. உலகமே புதிதாக தோன்றியது இருவருக்கும். ஆசை, சூழ்நிலை, தனிமையின் பிடி இவை அனைத்தும் ஒன்றிணைந்து பாதுகாப்பு குறித்த பயத்தை நீக்கியது. இப்படி எல்லாம் நடக்கும் என அருண் கனவிலும் நினைத்ததில்லை.
இப்படியே இவர்களின் உறவு நாளுக்கு நாள் ஆழமானது.சில மாதங்களுக்குப் பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அடுத்த சில நாட்களில், அருண் ஒரு பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்தார். பிரியா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
பிரியா எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது...
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேஷ் தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் எண்ணத்துடன் அவளிடம் சொல்லாமலே சிங்கப்பூரில் இருந்து திரும்பினான். வீட்டிற்கு வந்ததும் பிரியாவைப் பார்த்தான். அவளது வயிறு சற்று பெரிதாக இருந்தது.
"என்ன பிரியா... உன் வயிறு கொஞ்சம் பெரிசா இருக்கு?" என்று சிரித்தபடி கேட்டான்.
பிரியா நடுங்கியபடி சிரித்தாள்."சும்மா... சாப்பிடுறதை குறைக்கல. வீட்டுலயே இருக்கிறதால தொப்பை விழுந்துடுச்சு. ஒண்ணுமில்லை."
ராஜேஷ் நம்பினான்.
பத்து நாட்கள் கழித்து...
நள்ளிரவில் பிரியா வயிறு வலியில் கதறினாள். ராஜேஷ் அவசரமாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். சில மணி நேரங்களில் பிரியா ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள்.
குழந்தையைப் பார்த்த ராஜேஷின் உலகமே சுழன்றது.
"இது... இது என்ன பிரியா?!"
மருத்துவமனை அறையில் கண்ணீருடன் பிரியா உண்மையைச் சொன்னாள். அருண்னுடன் ஏற்பட்ட தவறு, தனிமை, கர்ப்பம், அருணின் மரணம்... அனைத்தையும்.
ராஜேஷ் கொந்தளித்தான்."நீ என்னை ஏமாத்தினியா? இந்த அசிங்கத்தை என்னால் ஏத்துக்க முடியாது! இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம்!"
மருத்துவமனையில் பயங்கர சண்டை. கத்தல், அடிதடி. காவல்துறையினர் விரைந்து வந்து ராஜேஷை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இன்று...
பிரியா தன் புதிதாகப் பிறந்த குழந்தையுடன், தன் தாயின் சிறிய உணவகத்திற்கு அருகில் இருக்கும் வீட்டில் தங்கியிருக்கிறாள். தந்தையும் இல்லை, கணவனும் இல்லை. தாயும் மகளும் மட்டுமே ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர்.
குஞ்சித்தண்ணியின் பச்சை ஏலக்காய் தோட்டங்கள் இன்றும் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் அந்த அழகான கிராமத்தின் ஒரு மூலையில், ஒரு பெண்ணின் வாழ்க்கை நிரந்தரமாக மாறிப்போனது.
சில சமயங்களில், தனிமை என்பது... மிகப் பெரிய விலை கொண்ட தவறுகளைச் செய்ய வைக்கிறது.
(குறிப்பு : இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
Summary : After four years working in Singapore, Rajesh returned to his Kerala village to surprise his wife Priya. He found her pregnant and soon she delivered a baby boy. The situation created serious difficulties in their marriage. Priya now stays with her mother and the newborn child.