இதை செய்தால் உடனே உடலுறவு! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காது கூசும் அசிங்கம்! கல் குவியல் கீழே இருந்த கொடூரம்!

தெலங்கானா மாநிலம் சங்கரட்டி மாவட்டம், நாராயணகேட் மண்டலம், கங்காப்பூர் கிராமம்.அங்கு விவசாயம் செய்து வரும் முத்தியம் ரெட்டி என்பவரின் வீட்டில் ஒரு காலத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. 11 வயது மகனும், 9 வயது மகளும் அப்பாவுடன் விளையாட, மனைவி கல்பனா வீட்டைக் கவனித்து வந்தாள். 

கல்பனா அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார்.ஆனால், இந்த அமைதியான குடும்பப் படம் ஒரு நாள் இருண்டு போனது.

கல்பனாவுக்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் மனூர் மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டு (பேகரி பண்டாரி என அழைக்கப்படும் அல்லியா சிண்டு) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

நாளடைவில் அந்தப் பழக்கம் தகாத உறவாக மாறியது. கல்பனா தன் கணவரையும், குழந்தைகளையும் மறந்து சிண்டுவுடன் மணிக்கணக்கில் போனில் பேசத் தொடங்கினாள். 

ஆனால், சிண்டு கல்பனாவிடம் அத்துமீற எவ்வளவோ முறை முயற்சி செய்தும் என்னை திருமணம் செய்து கொண்டால் தான் உடலுறவு மேற்படி விஷயமெல்லாம். திருமணத்துக்கு முன் உடலுறவுக்கு நோ சொல்லி வந்துள்ளார்.

இதை கவனித்த முத்தியம் ரெட்டிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் மனைவியை அறிவுரை கூறினார். “குடும்பத்தைப் பார்” என்று கெஞ்சினார். ஆனால் கல்பனா அதைப் பொருட்படுத்தவில்லை. சண்டைகள் அதிகரித்தன. வீட்டில் தினசரி சச்சரவு வெடித்தது.

ஒருநாள் கல்பனா தன் காதலன் சிண்டுவிடம் அழுதபடி சொன்னாள்:“இந்த மனுஷனாலதான் எல்லாம் பிரச்சனை. அவனை ஒழிச்சு கட்டுனா தான் நமக்கு நிம்மதி.” என வாட்ஸ் அப் செய்தாள்.

சிண்டு தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினான். அதற்கு பதிலளித்த கல்பனா, இந்த மனுஷனை தீர்த்து கட்டிய உடனே உன்னோட உடலுறவுக்கு சம்மதிக்கிறேன் என பதில் கொடுத்தாள். உடனே சம்மதித்த “நீ கவலைப்படாதே... அவனை நான் பார்த்துக்கறேன்” என்றான்.

அந்த இரவு...

மார்ச் 16-ம் தேதி இரவு. கல்பனா திட்டமிட்டபடி தன் கணவருக்கு அதிக அளவு மது ஊற்றிக் கொடுத்தாள். முத்தியம் ரெட்டி போதையில் தூங்கிப் போனார். நடுநிசியில் கல்பனா தன் காதலனுக்கு போன் செய்தாள்.

சிண்டு வந்ததும் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்தியம் ரெட்டியின் கழுத்தை நெறித்தனர். தள்ளாத போதையில் இருந்த அவர் திடீரென எழுந்து போராடியுள்ளார். ஆனால், உடலில் வலு இல்லாத காரணத்தால் அவர் துடிதுடித்து உயிர் பிரிந்தார்.

பின்னர் இருவரும் சடலத்தை வீட்டில் வைத்து சொல்லி வைத்தது போல உல்லாச உலகில் நுழைந்தனர். அதன் பிறகு, உடலே தங்கள் விவசாய நிலத்துக்கு கொண்டு போனார்கள். ஜேசிபி மூலம் பெரிய குழி தோண்டி, உடலைப் புதைத்து, மேல் பெரிய கற்களைப் போட்டு சமன் செய்துவிட்டு, சத்தமில்லாமல் திரும்பினார்கள்.

நாடகம் ஆரம்பம்...

மறுநாள் கல்பனா கணவரை காணவில்லை எனக் கூறி போலீசில் புகார் கொடுத்தாள். அழுதபடி நாடகமாடினாள். ஆனால் போலீசாருக்கு அந்த அழுகை நம்பிக்கையாக இல்லை. அவர்கள் உடனடியாக சந்தேகப்பட்டு, கல்பனாவை இரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

அவள் யாரிடம் பேசுகிறாள், எங்கெல்லாம் செல்கிறாள் என தீவிரமாக கண்காணித்ததில் சிண்டுவுடனான தொடர்பு தெரிய வந்தது. இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்கள் சொன்ன இடத்தில் உடலைத் தோண்டி எடுத்தனர். அழுகிய நிலையில் இருந்த சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது மகனும் 9 வயது மகளும் தந்தையை இழந்து அனாதையாக நிற்கும் பரிதாப நிலை பார்த்தவர்களை நெஞ்சை உலுக்குகிறது.

காதலுக்காகக் கணவரைக் கொன்று, உடலை விவசாய நிலத்தில் புதைத்து, பின்னர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி கல்பனா மற்றும் அவளது காதலன் சிண்டு – இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.

Summary : In Telangana, a woman named Kalpana developed a close relationship with her colleague Chindu. This led to frequent family disagreements with her husband Muthiyam Reddy. One night, after he consumed alcohol and slept, he went missing. Kalpana reported him missing to police. Investigation revealed both were involved in the disappearance. The body was later recovered from their farmland.