தர்பூசணியே காரணம்! ஆனால், ஆய்வின் முடிவில் வெளியான பகீர் தகவல்! ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்!

மும்பை : ஏப்ரல் 25, 2026 அன்று இரவு விருந்து சாப்பிட்ட பின்னர் தர்பூசணி பழம் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல உள்ளுறுப்பு பாதிப்புகளால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக லேபரட்டரி பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், தர்பூசணியில் ஜிங்க் பாஸ்பைட் (எலி மருந்து) நச்சுப் பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் விவரங்கள்:

விருந்தினர்கள் வீட்டை விட்டுச் சென்ற பின்னர் இரவு 1 மணியளவில் குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர்.

மறுநாள் காலையில் கடுமையான வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவர்களது உடல்நிலை மோசமடைந்து, அடுத்தடுத்து நான்கு பேரும் உயிரிழந்தனர்.

மருத்துவ வல்லுநர்களின் ஆய்வின்படி, சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் செயலிழந்ததே மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

லேப் அறிக்கை உண்மை வெளியீடு:

பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் தர்பூசணியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தலைமை ஆய்வக அறிக்கையின்படி, தர்பூசணியிலும் இறந்தவர்களின் உடலிலும் ஜிங்க் பாஸ்பைட் நச்சுப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நச்சு எலி ஒழிப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஜிங்க் பாஸ்பைட் ஆகும்.

வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து பாஸ்பைன் வாயுவை உருவாக்கி, உடலில் ஆக்ஸிஜன் சேர்க்கையைத் தடுத்து உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை செய்தி:

ஜிங்க் பாஸ்பைட் நிறம், சுவை, வாசனை எதுவும் இல்லாததால் உணவுடன் கலந்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனவே,

  • எலி மருந்தை உணவுப் பொருட்களுடன் ஒரே அலமாரியில் வைக்கக் கூடாது.
  • அசல் பேக்கிங்கை மாற்றி வேறு டப்பாவில் வைக்க வேண்டாம்.
  • மருந்து கையாளும் பின் நன்றாக கைகளை கழுவ வேண்டும்.
  • குழந்தைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்கு எட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

இந்த சம்பவம் விபத்தாகவோ அல்லது தவறுதலாக கலந்ததாகவோ இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

மருத்துவர் கார்த்திகேயன் தனது வீடியோவில் இந்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இத்தகவலை அனைத்து குடும்பங்களும், குறிப்பாக கிராமப்புறங்களில் எலி மருந்து அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் உள்ளோர் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary in English : Four members of a family in Mumbai died after eating watermelon on April 25, 2026. Lab reports confirmed the presence of zinc phosphide (rat poison) in the watermelon and victims' bodies. The odourless, tasteless toxin caused multi-organ failure. Doctors urge safe storage of rodenticides away from food items and thorough handwashing after handling.