திருவள்ளூர் மாவட்டத்தின் அமைதியான புறநகர்ப் பகுதியான மேல்பாக்கத்தில் இருந்து, தி.நகரில் பூக்கடை நடத்தி வரும் ரஜினி என்ற 40 வயது தொழிலதிபருக்கு வாழ்க்கை ஒரு காலத்தில் இனிமையான கனவாக இருந்தது. அவரது மனைவி கலைபவானி, 35 வயது.
இருவருக்கும் 18 வயது மகனும், 15 வயது மகளும். சொந்த வீடு என்ற கனவை நனவாக்க, திருவேற்காடு அருகே உள்ள வீரராகவபுரம் பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டத் தொடங்கினர்.

வீடு கட்டும் பணி நடைபெற்றபோது, அப்பகுதியில் துணி அயர்ன் செய்யும் கடை நடத்தி வந்த 36 வயது முருகன் அவர்களுக்கு உதவியாக இருந்தார். முருகனுக்கும் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.
ஆனால், கட்டுமானப் பணியின்போது கலைபவானியுடன் ஏற்பட்ட அவரது அடிக்கடி சந்திப்புகள், உதவிகள், பேச்சுகள்... மெல்ல மெல்ல ஒரு தடைபடாத பழக்கமாக மாறின. பின்னர் அது இருவருக்கும் இடையேயான கள்ளக்காதலாக உருமாறியது.
வீடு ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, இவர்களின் நெருக்கம் ஒரு பக்கம் வளர்ந்தது. அடிக்கடி தனிமை சந்திப்புகள், உல்லாசம், புதிய உலகை ரசித்தனர். உல்லாச உலகில் பறந்தனர்.வீடு கட்டி முடிந்து, ஒரு மாதத்துக்கு முன்பு புதுமனை புகுவிழா நடைபெற்றது. ரஜினியும் கலைபவானியும் குழந்தைகளுடன் புதிய வீட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.
புதிய வீட்டில் புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்த கலைபவானி, முருகனுடனான தொடர்பைத் துண்டிக்க முயன்றார். அவரைச் சந்திப்பதைக் குறைத்தார். பேச்சுகளைத் தவிர்த்தார்.
ஆனால், முருகனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதல் என்ற பெயரில் உருவான பற்றுதல், உல்லாச உலகம் திடீரென இல்லை என்றானதும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கலைபவானியுடனான நாட்கள், தனிமை, உல்லாசம் என ருசி கண்ட பூனையாக மாறியது முருகனின் மனம், இதுவே கலைபவானியின் வாழ்க்கை மீது பொறாமையாகவும், ஆத்திரமாகவும் மாறியது.
மே மாதம் 30-ம் தேதி காலை..
சூரியன் இன்னும் முழுமையாக உதிக்காத வேளை. வீரராகவபுரத்தின் அமைதியான தெருவில், புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தான் முருகன். கலைபவானியின் வீட்டுக்குள் பூனை போல சென்றான்.
"என்னை விட்டுவிடு... இனி இது சரியில்லை," என்று கலைபவானி சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஆனால், முருகனின் கண்களில் கோபம் தெரிந்தது. வாக்குவாதம் உச்சத்தைத் தொட்டது. உரக்கக் குரல் எழுந்தது. அறைக்குள் இருந்த 15 வயது மகள் பயத்தில் நடுங்கினால், நீ உள்ளே போய் கதவை சாத்திக்கோ என்றது தாய் கலைபவானியின் குரல், உடனே கொண்டு உள்ளே ஒளிந்து கொண்டாள் மகள்.
அடுத்த சில நிமிடங்களில், முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவினான். கோபத்தின் உச்சத்தில், கலைபவானியை சரமாரியாகக் குத்தினான். அவள் அலறினாள். அந்த அலறல் வீட்டை உலுக்கியது. இரத்தம் தெறித்தது. கலைபவானி தரையில் விழுந்து உயிருக்காக துடித்தாள்... சில நிமிடங்களில் அவளின் துடிப்பு அடங்கியது.
முருகன் தப்பிக்க முயன்றான். அருகில் இருந்த பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிக் குதித்தான். ஆனால் கால்கள் தவறின. உடல் பொத்தென கீழே விழுந்தது. இடுப்பு எலும்பு முறிந்த வலியில் அலறினான்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அலறல் சத்தம் கேட்டு கூடிய பொதுமக்கள் முருகனைச் சுற்றி வளைத்தனர். திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முருகனை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலைபவானியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
ஒரு குடும்பத்தின் கனவு, ஒரு பெண்ணின் உயிர், இரண்டு குழந்தைகளின் எதிர்காலம்... அனைத்தையும் ஒரு கள்ளக்காதல் என்ற இருண்ட நிழல் ஒரே நாளில் அழித்துவிட்டது.இந்தச் சம்பவம் திருவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் என்ற பெயரில் வரும் வன்முறை, எத்தனை குடும்பங்களைச் சிதைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு கொடூரமான சாட்சியாக நிற்கிறது.
சிலருக்கு இப்படி தோன்றலாம்:“கள்ளக்காதல் என்றால் எப்போதும் சோகத்தில்தான் முடிய வேண்டுமா? அதில் ஈடுபடுபவர்கள் நிம்மதியாக வாழ முடியாதா?”உண்மையில், சட்டத்தின் பார்வையில் கள்ளக்காதல் தவறில்லை. உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர்களிடையேயான துரோகத்தை குற்றமாக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டது.
அதாவது, சட்டப்படி எந்த தண்டனையும் இல்லை.ஆனால் உண்மை என்னவென்றால் — கள்ளக்காதலே ஒரு மிகப்பெரிய தண்டனை. அதுவே உங்களை நீங்களே அழித்துக்கொள்ளும் மெல்ல மெல்லக் கொல்லும் விஷம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை ஏமாற்றி, அவருக்குத் துரோகம் செய்யத் துணிந்த அந்த ஒரு நொடியிலிருந்தே உங்கள் அழிவின் முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறது. அந்த நொடியை நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாது. ஏனென்றால், அன்றிலிருந்து உங்கள் உள்ளுணர்வு உங்களை எப்போதும் துன்புறுத்தும்.
ஒரு நிமிடம் அமைதியாக சிந்தித்துப் பாருங்கள்:
- உங்கள் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும்?
- உங்கள் குழந்தைகளின் முகத்தில் எப்படி பார்ப்பீர்கள்?
- ஒரு நாள் இந்த உறவு உங்களைக் கட்டுப்படுத்த ஆரம்பித்து, நீங்கள் வெளியே வர முயன்றால் என்ன நடக்கும்?
உடல் பசியை கட்டுப்படுத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால் “ஒரு புதிய உலகம், உல்லாசம், புதிய உற்சாகம்” என்ற எண்ணம் உங்களை ஆட்டுவிக்கும் போது, அது உங்களை முழுமையாகப் பழிவாங்கும்.
கள்ளக்காதலில் இறங்குவது உங்கள் கையில் இருக்கலாம்.ஆனால் அதிலிருந்து வெளியே வருவது உங்கள் கையில் இல்லை. அது நீங்கள் ஈடுபட்ட நபரின் கையில் இருக்கும். அவர் உங்களை விட மாட்டார். உங்கள் பலவீனத்தை ஆயுதமாக்கி உங்களை அழிக்க முயல்வார். அல்லது நீங்களே உங்கள் குற்ற உணர்விலும் பயத்திலும் சிக்கி சிதைந்து போவீர்கள்.
உங்கள் உலகம், உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கைத் துணை — இவர்கள்தான் உண்மையான ஆதரவு. இவர்கள் தான் உங்களுக்கு எப்போதும் நல்லதை விரும்புபவர்கள். இடையில் வரும் எந்தவொரு தற்காலிக உறவும் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தின் மொத்த எதிர்காலத்தையும் சிதைத்துவிடும்.
வீரராகவபுரத்தில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அதைத்தான் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
ஒரு உண்மை :வெளியில் இருந்து வரும் எந்த உறவும் உங்களுக்கு நிம்மதியைத் தராது. அது தற்காலிக இன்பத்தை மட்டுமே தரும். பின்னர் அதன் விலை உங்கள் உயிராகவோ, உங்கள் குடும்பத்தின் அமைதியாகவோ, உங்கள் குழந்தைகளின் எதிர்காலமாகவோ இருக்கும்.
எனவே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உள்ள உறவைப் பேணுங்கள். சிறிய பிரச்னைகளைப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உடல் மற்றும் மனப் பசியை ஒழுக்கத்துடன் கட்டுப்படுத்துங்கள்.
கள்ளக்காதல் என்ற பெயரில் வரும் அந்த மாயையை நம்பாதீர்கள்.அது உங்களை அழிக்கும் வழி.உங்கள் குடும்பம் தான் உங்களுக்கு உண்மையான சொர்க்கம்.
இதை மறக்காதீர்கள்.
Summary : Thiruverkadu near Veeraragavapuram, Kalaipavani from a family that recently moved into their new house had a disagreement with Murugan, a local man who had helped during construction. The situation led to her sudden passing at home. Murugan was injured while trying to leave the area and was taken to hospital. Police are inquiring into the incident.