என்னுடைய மகள் துரோகம் பண்ணிட்டா! மனமுடைந்து அழுத பாக்யராஜ்!

நடிகர், இயக்குநர் பாக்கியராஜ் நேற்று காலமானார். இன்று அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது மகள் சரண்யாவின் காதல் திருமணம் தொடர்பான உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக்கியராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் இணைந்து பேசிய இந்த வீடியோவில், மகள் சரண்யா வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தை நினைவுகூர்ந்து கண்கலங்கினார்.

"என் பொண்ணு லவ்வா போனா என்னால ஜீரணம் பண்ணிக்க முடியல... நானும் பூர்ணிமா ரெண்டு பேரும் ஜாதி, மதம், பணம், பொருள் எல்லாத்தையும் தாண்டி வேற ஒரு காரணத்துக்காக ஜீரணிக்க முடியல" என்று உருக்கமாகப் பகிர்ந்தார்.

மகளின் பிறப்பு முதல் உணர்வுகள்

சரண்யா பிறந்தபோது அவருக்காக ஒரு கடிதம் எழுதியதாக பாக்கியராஜ் குறிப்பிட்டார். "உலகத்திலேயே என் மகளைத் தவிர வேற எதுவும் அழகு இல்லை... உன்னைப் பார்த்துட்டே இருந்தா போதும்" என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் அவரது சீரியல் 'சுகமான சுமை'யில் கிளைமாக்ஸ் காட்சியாகவும் இடம்பெற்றது.

சரண்யா 'பாரிஜாதம்' படத்தின் மூலம் பிரபலமானவர். அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டபோது குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழுந்தன. மகள் வீட்டைவிட்டு சென்ற நிலையில், பாக்கியராஜ் தம்பதியினர் முதலில் கோபத்தில் இருந்தனர்.

ஆனால், சரண்யா கர்ப்பமானதும் மனம் மாறினர். "நம்ம பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம்... இப்ப அவளுக்கு நாங்களைத் தவிர யார் இருக்கா?" என்று நினைத்து, அவர்களே சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

கர்ப்ப காலத்தில் தந்தையின் அரவணைப்பு

கர்ப்ப காலத்தில் சரண்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பாக்கியராஜ் தூக்கிச் சென்றார்.

பூர்ணிமா துணையாக இருந்தார். பேரன் பிறந்ததும் பாக்கியராஜ் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று குழந்தையை கையில் ஏந்தினார். அதன் பிறகு மூன்று-நான்கு மாதங்கள் வரை வீட்டிலேயே இருந்து உதவினார்.

பேரனுடன் ஏற்பட்ட பிணைப்பு

"இப்போ அவன் (பேரன்) கண்ணு முழிச்சு என்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டான். யார் இருந்தாலும் சுத்தி வந்து என்கிட்டேதான் வருவான்" என்று பாக்கியராஜ் பெருமிதத்துடன் பகிர்ந்தார்.

தான் பேரனைப் பார்க்காமல் இருக்க முடியாது, பேரனுக்கும் தான் இல்லையென்றால் முடியாது என்ற அளவுக்கு இருவருக்கும் இடையே பலமான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்...

"சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் யோசிக்கிறோம். ஆனா ரியல் லைஃப்லயும் இப்படி நடந்தது" என்று பாக்கியராஜ் சொன்னது உணர்ச்சியைத் தூண்டுகிறது.

'சுகமான சுமை' என்ற தலைப்பு தனது வாழ்க்கையிலும் பொருந்துவதாக அவர் நினைவுகூர்ந்தார். பேரனைப் பார்க்கும் போதெல்லாம் அது ஒரு "சுகமான சுமையாக" உணர்வதாகக் கூறினார்.

இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பாக்கியராஜின் இழப்பு தமிழ் சினிமா உலகுக்கு பெரும் இழப்பு. அவரது குடும்ப உறவுகள், தந்தை-மகள்-பேரன் பாசம் ஆகியவை ரசிகர்களை உருக்குகின்றன.

English Summary : Veteran actor-director Bhagyaraj, who passed away recently, emotionally spoke about his daughter Saranya's love marriage in a viral video. Initially unable to accept it, he and wife Poornima reconciled after her pregnancy. He shared touching memories of caring for her and developing a deep bond with his grandson, comparing real life to his serial 'Sugamana Sumai'.