என்னுடைய மகள் துரோகம் பண்ணிட்டா! மனமுடைந்து அழுத பாக்யராஜ்!
நடிகர், இயக்குநர் பாக்கியராஜ் நேற்று காலமானார். இன்று அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது மகள் சரண்யாவின் காதல் திருமணம் தொடர்பான உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாக்கியராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் இணைந்து பேசிய இந்த வீடியோவில், மகள் சரண்யா வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தை நினைவுகூர்ந்து கண்கலங்கினார். "என் பொண்ணு லவ்வா போனா என்னால ஜீரணம் பண்ணிக்க முடியல... நானும் பூர்ணிமா ரெண்டு பேரும் ஜாதி, மதம், பணம், பொருள் எல்லாத்தையும் தாண்டி வேற ஒரு காரணத்துக்காக ஜீரணிக்க முடியல" என்று உருக்கமாகப் பகிர்ந்தார். மகளின் பிறப்பு முதல் உணர்வுகள் சரண்யா பிறந்தபோது அவருக்காக ஒரு கடிதம் எழுதியதாக பாக்கியராஜ் குறிப்பிட்டார். "உலகத்திலேயே என் மகளைத் தவிர வேற எதுவும் அழகு இல்லை... உன்னைப் பார்த்துட்டே இருந்தா போதும்" என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் அவரது சீரியல் 'சுகமான சுமை'யில் கிளைமாக்ஸ் காட்சியாகவும் இடம்பெற்றது. சரண்யா 'பாரிஜாதம்' படத்தின் மூலம் பிரபலமானவர். அவர் காதலித்து திருமணம் செய...