சென்னை : மாடலிங் உலகில் இருந்து வந்து, ஒரு பிரபல தொலைக்காட்சியில் 'விஜே'யாக கவனம் ஈர்த்த அந்த அழகிய நடிகை, பின்னர் தெலுங்கு ரவுடி ஹீரோவின் தமிழ் படத்தில் தைரியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அதன் பிறகு கோலிவுட்டில் மாஸ் ஹீரோவின் படத்தில் முக்கிய ரோலில் தோன்றிய அவருக்கு, பெரிய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அங்கே செட்டாகாததால் சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்னும் பலருக்கு நினைவில் இருக்கும்.

ஷோவுக்குப் பிறகு பெரிய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சினிமா, சீரியல் என எந்தத் துறையிலும் கதவுகள் மூடப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் வாய்ப்புக்காக அலைந்த அவர், இறுதியில் பிழைப்புக்காக ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தற்போது அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டண சப்ஸ்கிரிப்ஷன் முறையைத் தொடங்கியுள்ளார். மாதா மாதம் கட்டணம் செலுத்தும் பிரத்யேக ரசிகர்களுக்காக வாரந்தோறும் கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த 'பிரத்யேக' உள்ளடக்கங்கள் அவ்வப்போது ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டு இணையத்தில் கசிந்து, அவரது பொது இமேஜை பாதிக்கும் வகையில் விவாதங்களையும் ட்ரோல்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
சினிமா உலகம் வாய்ப்பு தராவிட்டாலும், தனது துணிச்சலான அணுகுமுறையால் பண வருவாயை உறுதி செய்துள்ள இந்த நடிகை, "கை நிறைய வருமானம் வந்தால் போதும்" என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது பக்கத்தை மேம்படுத்தி வருவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது துணிச்சலை பாராட்டினாலும், பலர் பழைய கேரியர் பாதையை நினைத்து ஏக்கம் தெரிவிக்கின்றனர்.
English Summary : A former VJ and actress who appeared in Tamil-Telugu films and a major reality show has turned to paid Instagram subscriptions amid lack of film/serial opportunities. She shares bold photoshoots exclusively for subscribers, earning significantly from home, though leaked images occasionally spark online debates and damage her public image.
