உண்மையில் நடந்தது இது தான்! “Bro.. Bro.. என்று பழகிய ஆணுடன் உடலுறவு” கையும் களவுமாக சிக்கிய மனைவியின் பின்னணி!

திருச்சியில் நடைபெற்ற ஒரு குடும்ப மோதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது மனைவியை மற்றொரு நபருடன் இருக்கும் நிலையில் கண்டுபிடித்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இரு வருட கால குடும்ப பிரச்சனைகள் இருப்பதாக ராஜாவின் நண்பர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ராஜாவின் நண்பர் வெளியிட்ட வீடியோவில், “நம்ம பிரண்ட்தான் ராஜா அண்ணன். அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதாக சொன்னபோது ஆறுதல் சொன்னேன். ‘சரி அண்ணா விடுங்க, பரவாயில்லை பாத்துக்கலாம்’ என்று கூறினேன்” என தெரிவித்துள்ளார்.

ராஜா தனது மனைவியை காதலித்து திருமணம் செய்தவர் என்றும், நான்கு வயது மகனுக்கு அம்மா தேவை என்ற நம்பிக்கையில் பல முறை மனைவியை மீண்டும் இணைக்க முயற்சித்ததாகவும் நண்பர் கூறியுள்ளார்.

பின்னணி என்ன?

ராஜா தனது மனைவியுடன் சுமுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், மனைவி திருச்சி மாவட்டம் தென்னூர் பகுதியில் உள்ள சங்கீதபுரத்தில் வசிக்கும் ஜோஸ் என்று நபருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரை, ப்ரோ.. ப்ரோ.. என்று தான் அழைத்து பழகி வந்துள்ளார் இந்த பெண். இந்த விவகாரம் வெளியான பின்னர் ராஜா டிவோர்ஸ் வழக்கு தொடர்ந்ததாகவும், சொந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நண்பர் ராஜாவுக்கு “பிரச்சனை செய்ய வேண்டாம், உங்கள் பையனை பாருங்கள், உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் ராஜா தனது மனைவியை மீண்டும் இணைக்கும் நம்பிக்கையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சில நாட்கள் மீண்டும் இணைந்திருந்த இந்த தம்பதியர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு மனைவி வெளியேறியுள்ளார். இந்த நிலையில் ராஜா மனைவியை மற்றொரு நபருடன் இருக்கும் போது கண்டுபிடித்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் மனைவி படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜா தப்பிச் சென்ற நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜா தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட நான்கு வயது மகன் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

ராஜாவின் நண்பர் வெளியிட்ட வீடியோவில், “ஒரு குடும்பமே அழிந்துவிட்டது. நாலு வயது பையன் என்ன தவறு செய்தான்?” என்று விரக்தியுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் இந்த வீடியோவை பயன்படுத்தி லைக்குகளுக்காக பதிவிடுவதை தவிர்க்குமாறும், குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரங்களை தரக்குறைவாக பேசாமல் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் திருமண உறவுகள், நம்பிக்கை மற்றும் குடும்பப் பிரச்சனைகள் குறித்து பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் முழு விவகாரத்தையும் விசாரித்து வருகின்றனர்.

English Summary : In Trichy, Raja from Pattukottai allegedly assaulted his wife after spotting her with another man, leading to her hospitalization. His friend’s video revealed two years of marital issues, Raja’s love marriage, and repeated reconciliation attempts for their 4-year-old son’s sake. Raja has been arrested under attempt to murder charges; the child is in a shelter. The incident has gone viral, sparking debates on family breakdowns.