சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தில் தாயார் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், 19 வயது மகள் தான் இதற்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி?
19 வயது கல்லூரி மாணவி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்கு இடையே உருவான உறவின் காரணமாக அந்தப் பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விஷயம் அவரது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களுக்கு தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
கணவரை இழந்த நிலையில் தனது மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளை தனியாக வளர்த்து வந்த தாயார், மகளின் இந்த உறவை ஏற்றுக்கொள்ள மாட்டார் என பயந்த மாணவி, தனது காதலனின் உதவியுடன் திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.
அந்த இளைஞர் பகுதி நேரமாக ஒரு நகைக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஒரு இரசாயனப் பொருளை அவர் தனது காதலிக்கு கொடுத்து, குடும்ப உறுப்பினர்களின் உணவில் கலக்கச் சொன்னதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காதலனின் சொல்லுக்குப் பணிந்த மாணவி, அந்தப் பொருளை குடும்பத்தினர் சாப்பிடும் உணவில் கலந்துள்ளார். அதை உட்கொண்ட தாயார் மற்றும் மூன்று சகோதரர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து துடித்து உயிரிழந்துள்ளனர்.
மாணவியின் பதில் அதிர்ச்சி!
சம்பவத்துக்குப் பிறகு முதற்கட்ட விசாரணையில், “எனக்கு பசிக்கவில்லை, பிறகு சாப்பிடுகிறேன்” என்று கூறி உணவைத் தவிர்த்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
தனது குடும்பத்தினர் நான்கு பேரும் ஒரே நேரத்தில் இறந்ததற்கு எந்தவித பயமோ, கலக்கமோ இன்றி அமைதியாக பதிலளித்ததாகவும், இது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அவர் தனது காதலனுடன் தொடர்பில் இருந்ததும், அவரது வழிகாட்டுதலின்படி இந்தச் செயலைச் செய்ததும் தெளிவாகியுள்ளது.
காதல் உறவைத் தொடர முடியாத நிலையில் குடும்பத்தினரை இப்படி அகற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இந்த சம்பவம் சத்தீஸ்கர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது காதலனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரணங்களுக்கு காரணமான இரசாயனப் பொருள் குறித்தும், முழு சதித்திட்டம் குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் இளம் தலைமுறையினரிடையே உணர்ச்சிவசப்படுதல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் பிரச்னைகளை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.
English Summary : In Chhattisgarh, a 19-year-old college student was in a relationship that led to pregnancy. When her mother and three brothers learned about it, a substance from her partner's workplace was mixed into their meal. The mother and brothers fell unconscious and passed away one after another. The student remained safe as she skipped the meal. Police later found details from her phone.இதையும் படிங்க :
இதையும் படிங்க :