ஒரே நேரத்தில் நான்கு பேருடன்.. வெளியே வந்த புழுக்கள்.. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த பெண்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு பூட்டப்பட்ட மாடி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், கடந்த 15ஆம் தேதி வீட்டுக்குள் இருந்து புழுக்கள் வெளியே வரத் தொடங்கின.

இதை கவனித்த கீழ்த்தளத்தில் கடை நடத்தி வந்தவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சி ஒன்று கண்ணில் பட்டது.

வீட்டுக்குள் நைட்டி அணிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. சடலம் முழுமையாக அழுகிய நிலையில் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவர் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மரிய ஜெயா (வயது 35) என்பது உறுதி செய்யப்பட்டது.

கணவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்

கடந்த 10ஆம் தேதி மனைவி மரிய ஜெயாவை காணவில்லை என அவரது கணவர் ஆபேல் ராஜா முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மரிய ஜெயாவின் செல்போன் எண்ணில் கடைசியாக பேசியதாகக் கூறப்படும் கச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

வாடகை வீட்டில் தனியாக வசித்த மரிய ஜெயா

மரிய ஜெயா தனது கணவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில், நெல்லை பகுதியில் உள்ள ஆண் நண்பர்களை தனியாக சந்திப்பதற்காக நெல்லை டவுனில் வாடகை வீடு ஒன்றைப் பார்த்தார். 

அந்த வீட்டு உரிமையாளரிடம் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி நம்ப வைத்தார். வீட்டு உரிமையாளர் ஆதார் கார்டு கேட்டபோது, தனது கணவரிடம் கேட்டு வழங்குவதாகச் சொல்லி நீட்டித்தார்.

இதன்படி, சம்பவத்தன்று சுரேஷ்குமார் ஆதார் கார்டுடன் வீட்டுக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த மரிய ஜெயாவின் கழுத்து மற்றும் காதுகளில் இருந்த தங்க நகைகள் அவரது கவனத்தை ஈர்த்தன.

வீட்டில் இருந்த மரக் கட்டையை எடுத்து மரிய ஜெயாவின் பின்தலையில் பலமாகத் தாக்கியதாகவும், அவரது உயிரைப் பறித்துவிட்டு, அவரிடமிருந்த சுமார் 9 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்ததாகவும் சுரேஷ்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

வீட்டு உரிமையாளரின் சந்தேகம்

வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வந்த பெண் சொந்த ஊருக்குச் சென்று ஆதார் கார்டு எடுத்து வருவதாக நினைத்திருந்தார். ஆனால், வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் மற்றும் புழுக்கள் வெளியே வரத் தொடங்கியதால் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிசிடிவி மற்றும் செல்போன் ஆதாரங்களின் அடிப்படையில் கைது

மரிய ஜெயா சம்பவத்தன்று யாரிடம் எல்லாம் பேசினார் என்பது உள்ளிட்ட செல்போன் விவரங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போலீசார், சுரேஷ்குமாரை விரைவாகக் கைது செய்தனர். இந்த விரைவான நடவடிக்கைக்கு காவல் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மரிய ஜெயாவுடன் நட்பில் இருந்த பிற ஆண் நண்பர்களும் போலீசாரின் விசாரணையில் சிக்கி தவித்ததாகக் கூறப்படுகிறது. வழக்கு தொடர்பான முழு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

English Summary : In Tirunelveli town, a woman’s body was discovered inside a locked first-floor house on July 15 following a strong odour and presence of insects. The deceased was identified as Mariya Jeya from Mukkudal. 

Police arrested Suresh Kumar from Katchanallur in connection with the incident involving theft of gold jewellery. The case came to light after her husband filed a missing complaint. Investigations are ongoing based on call details and CCTV footage.

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!