Posts

Showing posts with the label Mariya Jeya

ஒரே நேரத்தில் நான்கு பேருடன்.. வெளியே வந்த புழுக்கள்.. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த பெண்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

Image
நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு பூட்டப்பட்ட மாடி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், கடந்த 15ஆம் தேதி வீட்டுக்குள் இருந்து புழுக்கள் வெளியே வரத் தொடங்கின. இதை கவனித்த கீழ்த்தளத்தில் கடை நடத்தி வந்தவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சி ஒன்று கண்ணில் பட்டது. வீட்டுக்குள் நைட்டி அணிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. சடலம் முழுமையாக அழுகிய நிலையில் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவர் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மரிய ஜெயா (வயது 35) என்பது உறுதி செய்யப்பட்டது. கணவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார் கடந்த 10ஆம் தேதி மனைவி மரிய ஜெயாவை காணவில்லை என அவரது கணவர் ஆபேல் ராஜா முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். மரிய ஜெயாவின் செல்போன் எண்ணில் கடைசியாக பேசியதாகக் கூறப்படும் கச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தன...