உடலுறவுக்கு முன் இதை செய்.. காதலியின் விசித்திர ஆசை.. நிறைவேற்றிய காதலன்.. இப்போது இரண்டு பேரும் சிறையில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் சூழகிரி தாலுக்கா தேவதாசன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ஹாசினி. அழகிய தோற்றம், பொன் நகைகள் அணிந்து புன்னகைக்கும் இவர், திருமணமான பெண், ஒரு குழந்தையின் தாய். ஆனால் இந்த புகைப்படத்தின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட ரகசியம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும். ஹாசினியின் கணவர் ரமேஷ். ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2024-ம் ஆண்டு ஹாசினிக்கும் ரமேஷுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு மௌனிகா என்ற 1.5 வயது மகளும் உள்ளார். ஹாசினியின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் சாந்திபுர மண்டலம் போயனப்பள்ளி கிராமம். திருமணத்துக்கு முன்பே ஹாசினி தன் சொந்த ஊரைச் சேர்ந்த சிறுவயது நண்பர் யோகேந்திரனை (யுகேந்திரன்) காதலித்து வந்தார். ரமேஷுடன் திருமணம் ஆன பிறகும், சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்த ஹாசினி, யோகேந்திரனுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தினார். இருவரும் திருமணத்துக்குப் பின்னரும் கள்ளக்காதலைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் ஹாசினி யோகேந்திரனிடம், “இந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. உன்னுடனே நிரந்தரமாக இருக்க வேண்டும். ரமேஷுடன் வாழ முடியாது. நாம் இ...