சூர்ப்பனகை மூக்கை வெட்டியது என்பது புனைவு , உண்மையில் வெட்டபட்ட உறுப்பு எது தெரியுமா?

இதிகாச ஆய்வு: சூர்ப்பனகை உறுப்பறைப்பு – வால்மீகி மற்றும் கம்பர் பதிப்புகளில் உள்ள வேறுபாடு

ராமாயண இதிகாசத்தில் சூர்ப்பனகை மீதான லட்சுமணனின் உறுப்பறைப்பு சம்பவம் பற்றி பொதுவாக மூக்கு வெட்டப்பட்டதாகவே அறியப்படுகிறது.

ஆனால் வெவ்வேறு பாரம்பரியங்களில் இந்த நிகழ்வு வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில், சூர்ப்பனகை சீதையைத் தாக்க முற்பட்டபோது ராமனின் உத்தரவின்படி லட்சுமணன் அவளுடைய மூக்கையும் காதுகளையும் அறுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே பரவலாக அறியப்பட்ட பதிப்பாகும்.ஆனால் தமிழ் மரபின் முக்கிய ஆதாரமான கம்பராமாயணத்தில் (சூர்ப்பணகைப் படலம்) இந்த சம்பவம் மேலும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

'ஊக்கித் தாங்கி, விண் படர்வென்' என்று உருத்து எழுவாளை,

நூக்கி, நொய்தினில் 'வெய்து இழையேல்' என நுவலா,

மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்

போக்கி, போக்கிய சினத்தொடும்,

கம்பர், சீதை தனியாக இருக்கிறாள் என்று எண்ணிய சூர்ப்பனகை அவளுடைய அழகை சிதைக்க முயற்சி செய்தாள். ஆனால் சீதையை காக்க லட்சுமணன் அந்த சோலைவனப் பகுதியில் தான் இருக்கிறார் என்பதை சூர்ப்பனகை அறியவில்லை.

கொடூர எண்ணத்துடன் சீதையை நெருங்கிய சூர்ப்பனகை பற்றி லட்சுமணன் அறிந்தார். யாரை தாக்க முயற்சிக்கிறாய் நில்லடி என்று கோபமாக கத்தி இப்ப நகையின் கூந்தலை பிடித்து திருகி இழுத்து தலையில் தள்ளினார்.

அப்போது பயந்து போன சூர்ப்பனகை தட்டு தடுமாறி எழுந்து விண்ணில் பாய்ந்து பறந்து தப்பிக்க முயற்சி செய்தால். கடும் சினம் கொண்ட லட்சுமணன் சூர்ப்பனகையை பிடித்து இழுத்து தரையில் வீழ்த்தி சீதையின் அழகை சிதைக்க முயற்சி செய்தாயா? நான் உன்னுடைய அழகை சிதைப்பேன். என்று சொல்லி அவருடைய மூக்கு காது மற்றும்முலைக் கண்கள் அதாவது முன்னழகின் காம்பு பகுதியை அறுத்துஉன்னுடைய அழகை நான் சிதைத்து விட்டேன் என்று சினம் அடங்கினான்.

தமிழ் இலக்கிய மரபில் முலைகள் பெண் சக்தியின் அடையாளமாகவும், பிரதான பெண்ணழகாகவும் கருதப்படுவதால், இது கடுமையான அவமானச் செயலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சில ஆய்வாளர்களும் பாரம்பரிய விளக்கங்களும், பொதுமக்களிடம் பரவிய “மூக்கறுத்தல்” என்ற பதிப்பு நாகரீகக் கருத்தில் சுத்திகரிக்கப்பட்ட வடிவம் என்றும், கம்பர் பதிப்பில் கூடுதல் உறுப்புகளும் அடங்கியுள்ளன என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும் இவை அனைத்தும் இதிகாச இலக்கியப் பதிப்புகளே அன்றி உண்மையான வரலாற்று நிகழ்வுகள் அல்ல என்று வாதிடுபவர்களும் உண்டு.ராமாயணம் வெவ்வேறு பிராந்தியங்களிலும் காலங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டு வந்துள்ளது.

வால்மீகி மற்றும் கம்பர் ஆகிய இரு பெரும் படைப்பாளிகளின் பதிப்புகளுக்கிடையேயான இந்த வேறுபாடு, இதிகாசத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

Summary in English : In the Ramayana tradition, accounts of Surpanakha’s encounter with Lakshmana differ across versions. Valmiki describes the cutting of her nose and ears. The Tamil Kamba Ramayana includes additional details involving the breasts. These variations reflect literary differences in epic storytelling rather than a single historical event, highlighting the diverse regional interpretations of the ancient narrative.
------Advertisement------
------Advertisement------