வெட்கம்கெட்டத்தனம்.. ஊரறிய செஞ்சாலும் குற்றம் குற்றமே.. திரிஷாவை விளாசிய முன்னணி நடிகை..

சென்னை கோட்டை கொத்தளத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றிய போது, நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிகழ்வைக் கண்ட நடிகை கஸ்தூரி, “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய், கோட்டை கொத்தளத்தில் நடந்த விழாவில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நடிகை த்ரிஷா முன்கூட்டியே வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

விழா நிறைவடைந்து முதல்வர் புறப்பட்டபோது, த்ரிஷாவுக்கு சல்யூட் வைத்து டாட்டா காட்டிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இது தனி நிகழ்வு அல்ல. விஜய் முதல்வராகப் பதவியேற்ற போதும் த்ரிஷா தனது தோழி அர்ச்சனா கல்பாத்தியுடன் கலந்துகொண்டார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவின்போது விஜய் ஆறுதல் சொல்லச் சென்றபோதும் த்ரிஷா உடன் இருந்தார். விஜயின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் இரவில் த்ரிஷா கேக் வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டதும் நினைவுக்கு வருகிறது.

இதற்கிடையே விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தரப்பில் ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட்டதால் தவெக ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

சுதந்திர தின விழாவில் விஜய் குடும்பத்துடன் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் பரவியிருந்த நிலையில், த்ரிஷாவுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான். நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தவெக ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழாவில் நடந்த இந்தக் காட்சிகள் இப்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

Summary in English : At Chennai’s Independence Day event, Chief Minister Vijay hoisted the national flag as actress Trisha watched from the front row. Videos of him saluting her later went viral. Actress Kasthuri criticised the scene as shamelessness rather than freedom. Trisha’s earlier appearances with Vijay and the withdrawal of his wife’s divorce petition have added to the discussion.
------Advertisement------
------Advertisement------