Posts

Showing posts with the label Kasthuri criticism

வெட்கம்கெட்டத்தனம்.. ஊரறிய செஞ்சாலும் குற்றம் குற்றமே.. திரிஷாவை விளாசிய முன்னணி நடிகை..

Image
சென்னை கோட்டை கொத்தளத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றிய போது, நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிகழ்வைக் கண்ட நடிகை கஸ்தூரி, “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய், கோட்டை கொத்தளத்தில் நடந்த விழாவில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நடிகை த்ரிஷா முன்கூட்டியே வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா நிறைவடைந்து முதல்வர் புறப்பட்டபோது, த்ரிஷாவுக்கு சல்யூட் வைத்து டாட்டா காட்டிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது தனி நிகழ்வு அல்ல. விஜய் முதல்வராகப் பதவியேற்ற போதும் த்ரிஷா தனது தோழி அர்ச்சனா கல்பாத்தியுடன் கலந்துகொண்டார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவின்போது விஜய் ஆறுதல் சொல்லச் சென்றபோதும் த்ரிஷா உடன் இருந்தார். விஜயின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் இரவில் த்ரிஷா கேக் வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டதும் நினைவுக்கு வருகிறது. இதற...