ஆவின் பால் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்

ஆவின் பால் நிறுவனத்தில் மாதாந்திர அட்டையுடன் சலுகையுடன் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் கார்டு அவசியமென்ன ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பால் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க மாதாந்திர  அட்டை மூலம் பால் வழங்கி வருகிறது ஆவின் பால் நிறுவனம்.

ஆவின் நிறுவனம் விலையை உயர்த்திய போதும் அதன் தரத்தை நம்பி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பால் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அட்டையின் மூலம் பால் வாங்கி வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி மாதாந்திர அட்டை மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் கார்டு கட்டாயம் எனவும் நுகர்வோர்களுக்கு பால் இன்றியமையாதது என்பதை உணர்ந்தே ஆதார் விபரம் சேகரிக்கப்படுகிறது எனவும்  ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான பணியை மேற்கொள்ளுமாறு மண்டலம் தோறும் மாவட்டம் தூரம் உள்ள அதிகாரிகளுக்கு ஆவின் நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

--Advertisement--

நீங்கள் மாதாந்திர வாடிக்கையாளர் எனில் நீங்கள்  ஆவின் பால் வாங்கும்  ஆவின் அலுவலகத்திலேயே உங்கள் ஆதார் கார்டை இணைத்துக் கொள்ளலாம்.

இதுபோல முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.