Actress | நடிகைகள்
உடல் எடை குறைத்து ஒல்லியான விஜய் டிவி ஜாக்லின்..! – ரசிகர்கள் ஷாக்..!
குண்டாக பொசுபொசுவென இருந்த விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்லின் தற்பொழுது கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவு முதளிரவர்ரை பின்பற்றி உடல் எடையை கணிசமாய் குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எளிதாக பிரபலம் ஆகி விடுவார்கள்.
எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் கூட விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. காரணம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் தன்மை அந்த அளவுக்கு இருக்கிறது.
எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் கூட விஜய் தொலைக்காட்சியில் ஹிட் அடிக்கக்கூடிய நிகழ்ச்சிகளை தேர்வு செய்து தான் அதனை அப்படியே காப்பி அடித்து ஒளிபரப்பு செய்வார்கள்.
ஆனால், விஜய் டிவி தான் முதன் முதலில் அப்படியான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் எனவே ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அந்த வகையில், திவ்யதர்ஷினி பிரியங்கா தேஷ் பாண்டேவுக்கு அடுத்தபடியாக ரசிகர் மன்றத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு தொகுப்பாளினி என்றால் அது ஜாக்லின் என்று கூறலாம்.
தொகுப்பாளர்கள் என்றாலே நல்ல குரல் வளம் இருக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது ஆனால் இவர் அந்த விதிக்கு அப்பாற்பட்டவர் தன்னுடைய கரகர குரலை வைத்துக் கொண்டு கேளிக்கையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திறமையை கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
தற்பொழுது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் இவர் விரைவில் சினிமாவிலும் துணை நடிகையாக பயணிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் போல தெரிகிறது.
காரணம் ஏற்கனவே இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக அதன் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார்.
எனவே தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார். இந்த சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகின்றது.
