“பத்திரிகையாளர் கேட்ட ஒத்த கேள்வி…” – கடுப்பாகி கத்திய நடிகை அனு இம்மானுவேல்..!

நடிகை அனு இம்மானுவேல் ( Anu Emmanuel ) தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இப்போது தெலுங்கு படங்களிலும் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை அல்லு அர்ஜுன் மற்றும் அவருடைய சகோதரர் அல்லு சிரீஷ் ஆகியோருடன் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ்-ஐ காதலித்து வருவதாகவும் அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் இணையத்தை வட்டமடித்து கொண்டிருகின்றன.

Anu Emmanuel

இதனை மறுத்திருக்கிறார் நடிகை அனு இம்மானுவேல். மேலும், நான் யாரையும் காதலிக்கவில்லை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் யோசனையும் என்னிடம் கிடையாது என பதில் அளித்து இருக்கிறார்.

ஊர்வஷிவோ ராக்ஷஷிவோ என்ற திரைப்படத்தில் அல்லு சிரிஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை அனு இம்மானுவேல். இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடித்த பிறகு இருவரின் மீதான காதல் கிசு கிசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தன.

Anu Emmanuel

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனு இம்மானுவேலிடம் அல்லு அர்ஜுன், அல்லு சுரேஷ் என இருவருடனும் நடித்திருக்கிறீர்கள்.

--Advertisement--

இவர்கள் இருவரில் யார் உங்களிடம் நெருக்கமாக ஒளிவு மறைவு இல்லாமல் பழகக் கூடியவர் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்ட நடிகை அனு இம்மானுவேல் பத்திரிகையாளர்களாக நீங்கள் கேட்பதற்கு வேறு கேள்வியே இல்லையா..?

Anu Emmanuel

இன்னும் சிறந்த கேள்விகளை எழுப்பலாமே. திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த படத்தின் இயக்குனர் படத்தின் கதை உள்ளிட்டவற்றை பற்றி கேட்கலாம்.

ஆனால் படத்தில் நடித்த நடிகைகள் நடிகருடனான உறவு பற்றி கேட்கிறீர்கள். மேலை நாடுகளில் இது போன்ற கேள்விகள் நடிகைகளை நோக்கி வீசப்படுவது கிடையாது.

Anu Emmanuel

ஆனால் இங்கே இப்படி ஆன கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நான் நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இப்படியான கேள்விகளை எழுப்பும் பொழுது என்ன பதிலை எங்களால் கூற முடியும் என கடுப்பகியுள்ளார் நடிகை அனு இமானுவேல்.

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.