ஆர்யா குறித்த கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த அபர்ணதி..! அட கொடுமைய..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.
இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆர்யா நடித்த கலாபக்காதலன், அவன் இவன், பட்டியல், வட்டாரம், உள்ளம் கேட்குமே, ஓரம்போ, சார்பட்டா பரம்பரை, கஜினிகாந்த், டெடி, ராஜா ராணி போன்ற படங்கள் மிக நல்ல படங்களாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றன.

ஆனால் சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு வெளியான ஆர்யா படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியான கவனத்தை ரசிகர்களிடம் பெறவில்லை. குறிப்பாக அரண்மனை 3, காப்பான், கேப்டன், எனிமி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக இருந்தன. நான் கடவுள், மதராச பட்டணம் போன்ற வித்யாசமான படங்களில் நடித்த ஆர்யாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்த படங்கள் திருப்தியளிக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், டெடி படத்தில் நடிகை சாயிஷாவுடன் நடித்த ஆர்யா தன்னை விட 17 வயது குறைந்த பெண்ணான சாயிஷாவை காதலித்து திருமணமும் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இப்போது குழந்தை உள்ளது. ஆனால் அதற்கு முன், எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி ஷோவில் பங்கேற்ற ஆர்யா. அதில் தனக்கு பிடித்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 18 பெண்கள் கலந்துக்கொண்டு அவருடன் தங்களது உணர்வுகளை பகிர்ந்துக்கொண்டனர். அதில் அபர்ணதி என்ற நடிகையும் ஒருவர். அவர் இறுதி வரை ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள மிகவும் விரும்பி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அவர் யாரையும் அந்த நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் அபர்ணதி சில படங்களில் நடித்து வருகிறார். ஆர்யா குறித்து அபர்ணதியிடம் சமீபத்தில் கேட்கப்பட்ட போது, ஆர்யா கல்யாணமான அங்கிள், அவ்வளவுதான், அவரை பத்தி பேச என்கிட்ட என்ன இருக்கு, என திருப்பி கேட்டுள்ளார் அபர்ணதி. அது இப்போது வைரலாகி வருகிறது.