Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முக்கிய தினங்களில் தவிர்க்க கூடாத காய் கனிகள்..! – வாங்க பாக்கலாம்..!

Astrology | ஜோதிடம்

முக்கிய தினங்களில் தவிர்க்க கூடாத காய் கனிகள்..! – வாங்க பாக்கலாம்..!

அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, துவாதசி, போன்ற நாட்களில்  சில முக்கிய காய் கனிகளை உணவில் கடைபிடிப்பதால் நமது உடலுக்கு அதிக பலன் கிடைக்கிறது.

இந்த நாட்களில்  உள்ள கிரகங்களின் அமைப்புகள் , பூமி, மனிதன் இவற்றிக்கு  இடையே உள்ள ஈர்ப்பு சக்தியானது  மனிதனுக்கு தீமை ஏற்படுத்தாமல் நன்மை செய்யவும் நம் உடல் , உள் உறுப்புக்களை  அதுக்காகத்தான் நமது முன்னோர்கள் இந்தக் குறிப்பிட்ட காய் மற்றும் கனிகளை உணவில் சேர்த்து வந்துள்ளனர். என் மூலம் தீய ஈர்ப்பு சக்தியில் இருந்து நம் உடலையும் மனதையும் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது.

அம்மாவாசைக்கு உகந்த காய்கறிகள்:

அம்மாவாசையன்று சேப்பங்கிழங்கு, வாழைக்காய், வாழைத்தண்டு மற்றும் கொடியில் விளைந்த பூசணிக்காய், அரசாணிக்காய் , அவரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நன்மையளிக்கும். 

தவிர்க்க வேண்டிய காய்கறிகள்  கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்றவை.

பௌர்ணமிக்கு உகந்த காய்கள்:

பௌர்ணமி அன்று நிலவு மிகவும் பெரிதாக காட்சிகளுக்கும். அந்நாளில் வெள்ளை, நீல நிற கோடு போட்ட கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூளை ஆரோக்கியம்  பாதுகாக்கப்படுவதாக முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிரதோஷம் மற்றும் துவாதசி:

பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரம் ஆகும். இந்த நாளில் பொன்னாங்கண்ணிக் கீரையை அருந்துவதின் மூலம் கண் பார்வை விருத்தியாகும்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் நெல்லிக்காய் அகத்திக் கீரை சுண்டைக்காய் போன்றவற்றை துவாதசி இன்று சேர்த்துக் கொள்வதன் மூலம்  நோய் எதிர்ப்புசக்தி கூடுவதுடன் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.

சிவன்ராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி:

சிவபெருமானின் பிறந்தநாளான சிவன் ராத்திரியில் எல்லா வகையான பயிர்களையும் கலந்து பள்ளயம் எனும் பெயரில் உப்பில்லாமல் மறுநாள் விரதம் இருந்து உட்கொள்வதின் மூலம் எண்ணற்ற பலன்கள் உடலுக்கு கிடைக்கிறது. இன்னும் பல கிராமங்களில் சிவராத்திரியன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று இந்த விரத முறையை  தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள்.

சித்ரா பவுர்ணமி அன்று  சித்திரகுப்தருக்கு ஒன்பது வகையான கலவை சாதம்  எள் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், பால் சாதம், பருப்பு சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், புளி சாதம் இவற்றை ஆற்றங்கரையில் படையலிட்டு வணங்கி வருவதை இன்றும் நடைமுறையில் பல பகுதிகளில் காணலாம்.

நவராத்திரி

நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா. இதில் புரோட்டீன் சத்து நிறைந்த சுண்டல் வகைகள்   பிரசாதமாக படைக்கப்பட்டு  அனைவருக்கும் வழங்கப்படும். ஒன்பது நாட்களும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளப்படும்.

மேற்கூறிய நாட்களில் கூறிய காய்களை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே கணித்து பாருங்களேன். அப்போது உங்களுக்கு நம் முன்னோர்களின் அருமை நிச்சயம் புரியும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

  • saapam saapam

    Astrology | ஜோதிடம்

    சாபங்கள் நீங்க எளிய வழிகள்

    By

    ஆன்மிகத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4-வது ராசியில் இருந்தால் அவர்களுக்கு...

  • Astrology | ஜோதிடம்

    அமாவாசையன்று வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்?

    By

    அமாவாசையில் வாகனங்கள் ஏன் வாங்கக் கூடாது எனபதற்கு காரணம் உங்களுக்கு தெரியுமா.அதைப் பற்றி இந்த விரிவாக நீங்கள் விளக்கமாக படிக்கலாம்.  பஞ்சாங்கத்தில்...

  • food food

    Astrology | ஜோதிடம்

    சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

    By

    சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன .இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் சூரியன்...

  • house house

    Astrology | ஜோதிடம்

    வாஸ்து

    By

    நம் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காலியிடங்கள் வந்தால் நன்கு ஆராய்ந்து தான் வாங்க வேண்டும்.இல்லாவிட்டால் தீமையுண்டாகும். படுக்கையறை கிழக்கு...

  • birds birds

    Astrology | ஜோதிடம்

    வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.

    By

    (1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ...

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top